OUR CLIENTS
விழுப்புரத்தில் அதிகம் முளைத்துள்ள சீட்டாட்ட கிளப்புகள்!
விழுப்புரத்தில் அதிகம் முளைத்துள்ள சீட்டாட்ட கிளப்புகள்! Posted on 07-May-2017 விழுப்புரத்தில் அதிகம் முளைத்துள்ள சீட்டாட்ட கிளப்புகள்!

விழுப்புரம், மே 7-
விழுப்புரத்தில் அதிகம் முளைத்துள்ள சீட்டாட்ட கிளப்புகள் மீது காவல் துறையின் பார்வை இதுநாள் வரை விழாமல் இருப்பது அதியசமாக உள்ளது.

விழுப்புரத்தில் புற்றீசல்க்ள போல அண்மையில் சீட்டாட்ட கிளப்புகள் வேகவேகமாக வளர்ந்து வருகின்றன. இவர்கள் மனமகிழ் மன்றம் போல இந்த கிளப்புகளை நடத்தி வருகின்றனர். இரவு நேரங்களில் மது அருந்துவது, விபச்சார அழகிகளை அழைத்து வந்து உல்லாசமாக இருப்பது என்று இந்த கிளப்புகள் இயங்கி வருகின்றன. இதை கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டிய காவல் துறையினர் இவர்களை நாடிச் சென்று பணம் வாங்கி கொண்டு செல்வதை வழக்கமாக கொண்டுள்ளனர்.

சமூக விரோதிகளுக்கு சிம்மசொப்பனமாக இருக்க வேண்டிய காவல் துறை அவர்களுக்கு பாதுகாப்பு வழங்குவதோடு மட்டுமல்லாமல் அடிபணிந்து போகிறத நிலையை ஏற்படுத்தியுள்ளனர். காவல் துறையின் கம்பீரத்தை இழந்து விழுப்புரம் மாவட்டம் தத்தளிக்கிறது. இதை தடுத்து நிறுத்த வேண்டிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நரேந்திரன் நாயர் நாட்டில் எது நடந்தால் நமக்கென்ன என்று இருக்கையை விட்டு அகலுவதே இல்லை. இப்படி அதிகாரிகளும் இருப்பதால் காவலர்கள் காட்டில் அடை மழை பெய்கிறதாம். கூத்தும் கும்மாளமுமாக சீட்டாட்ட கிளப்புகள் நகரின் மையப்பகுதிகளில் இருந்து கடைகோடி பகுதி வரை நடைபெறுகிறது.

விபச்சார அழகிகள் பட்டியல் பெயருடன் அண்மையில் காலச்சக்கரம் வெளியிட்டது. அப்படியும் காவல் துறை  நடவடிக்கை எடுத்தபாடில்லை. டிஎஸ்பி மட்டும் செயல்பட்டால் போதாது. அவரைச் சுற்றியுள்ள ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள், தலைமை காவலர்கள், காவலர்கள் சிறப்பாக செயல்பட்டால் போதும் நாட்டில் சமூக விரோதிகள் ஒழிக்கப்படுவார்கள். ஆனால் அவர்களை நாடிச் சென்று எங்களது ஆதரவு உண்டு என்று காவலர்கள் சொல்லுகின்றனர். இதுதான் அவர்கள் வளர வழிவகை செய்கிறது.

போலீசார் ஆசியுடன்தான் இதுபோன்ற திரைமறைவு  வேலைகள் நடக்கின்றன. பணம் கொழிக்க வழிவகை செய்து கொள்கின்றனர் காவலர்கள். இதற்கு ஏன் இவர்கள் காவல் துறைக்கு வர வேண்டும். இன்னும் அரசில் உள்ள பல துறைகளை தேர்வு செய்திருக்கலாம் என்று சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். இரவு 7 மணிக்கு மேல் பாடல் போட்டு விட்டு கள்ளக்காதலர்கள் போதையில் நடனமாடுகின்றனர். சில கிளப்புகளில் ஒருபடி மேலே சென்று காபரே நடனம் நடைபெறுவதாகவும் கூறப்படுகிறது.

சில சீட்டாட்ட கிளப்புகள் லைசென்ஸ் எடுத்து வைத்து கொண்டு கொட்டமடிக்கின்றன. பல லைசென்ஸ் இல்லாமல் கொட்டமடிக்கின்றன. டிஐஜியாவது இதில் தனிக்கவனம் செலுத்தி சீட்டாட்ட கிளப்புகளுக்கு நிரந்தரமாக மூடுவிழா நடத்த வேண்டும் என்பதுதான் நகர மக்களின் ஒட்டமொத்த எதிர்பார்ப்பாகும். போலீசாரின் செயல்பாடுகளை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Label