OUR CLIENTS
சாலையை ஆக்கிரமிக்கும் ஆர்த்தி ஸ்கேன் சென்டர்... போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவிக்கும் மக்கள்!
சாலையை ஆக்கிரமிக்கும் ஆர்த்தி ஸ்கேன் சென்டர்... போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவிக்கும் மக்கள்! Posted on 05-May-2017 சாலையை ஆக்கிரமிக்கும் ஆர்த்தி ஸ்கேன் சென்டர்... போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவிக்கும் மக்கள்!

சென்னை, மே 5-
சென்னை வடபழனியில் ஆர்த்தி ஸ்கேன் சென்டர் போக்குவரத்துக்கு இடையூறாக வாகனங்களை நிறுத்தி வைத்து கொண்டு பொதுமக்களிடம் வம்புச்சண்டையை வளர்க்கும் விதமாக செயல்பட்டு வருகின்றனர்.

சென்னை வடபழனியில் ஆர்த்தி ஸ்கேன் சென்டர் உள்ளது. இங்கு வரும் நோயாளிகள் சிறிது நேரம் வாகனங்களை நிறுத்தி விட்டு எடுத்துச் சென்று விடுகின்றனர். ஆனால் இங்கு நிரந்தரமாக ஆம்புலன்ஸ் வேன்க் நிறுத்தி வைத்து கொண்டு அந்த வழியாக நடந்து செல்வோர் தங்குதடையின்றி நடைபாதைகளை பயன்படுத்த முடியாத வகையில் இடையூறு செய்கின்றனர். இதனால் பொதுமக்கள் சொல்லொனாத் துயரத்துக்கு ஆளாகின்றனர். இதை சிலர் தட்டிக்  கேட்டால் நாங்கள் ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் என்று கூறி தப்பி விடுவோம் என்று நக்கலாக கூறுகின்றனர். அத்துடன் அந்தவழியாக நடந்த செல்லும் இளம்பெண்கள் மற்றும் பெண்களை வர்ணனை செய்வது பாட்டு பாடி கிண்டல் செய்வது போன்ற 'ஈவ்டீசிங்' வேலைகளில் ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் என்ற போர்வையில் சில ரௌடிகள் களம் இறங்கியுள்ளனர். 

இவர்களை இந்த ஏரியாவை கண்காணிக்கும் போக்குவரத்து பிரிவு போலீசாரும் கண்டுகொள்ளாமல் மௌனமாக இருந்து வருகின்றனர். இதற்கு காரணம் மாதந்தோறும் இந்த ஆர்த்தி ஸ்கேன்ஸ் நிறுவனம் போக்குவரத்து காவல் துறைக்கு மாமூலை தாராளமாக அள்ளி வீசுகிறதாம். பொதுமக்களுக்கு சேவை செய்ய வேண்டிய போக்குவரத்து காவல் துறை தனியாருக்கு சேவகம் செய்து பிழைப்பு  நடத்தி வருகிறது. குறிப்பாக மாலை முதல் இரவு 10 மணி வரை இந்த பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதை கூட கவனத்தில் கொள்ளாமல் அதே இடத்தில் இந்த ஆம்புலன்ஸ்கள் நிறுத்தி வைக்கப்படுகின்றன.

இந்த அளவுக்கு இவர்களுக்கு அதிகாரம் கொடுத்தது யார்? போக்குவரத்து காவல் துறை ஆர்த்தி ஸ்கேன் நிறுவனத்திடம் அடிமைப்பட்டு கிடக்க பின்னணி என்ன? என்பதெல்லாம் அதிர்ச்சியூட்டும் செய்தியாக வெளிவருகிறது. கடமையை செய்ய ஏன் தயக்கம் காட்டுகிறது போக்குவரத்து காவல் துறை என்பது புரியாத புதிராக உள்ளது. மாலை நேரத்தில் இந்த இடத்தில் போக்குவரத்து காவலர்களை நிறுத்தி மக்கள் படும் பாட்டை வேடிக்கை பார்க்கச் சொல்ல வேண்டும். 

அப்போதுதான் உண்மை நிலை என்னவென்று அவர்களுக்கு தெரியும். பொதுமக்களுக்கு சேவை செய்ய வேண்டியவர்கள் யார் யாருக்கு கை கட்டி சேவகம் பார்த்து வருகிறார்கள். இது கண்டிக்கத்தக்கதாகும். மாநகர காவல் ஆணையர் சின்ஹா காவல் துறையில் உள்ள கருப்பு ஆடுகளை அடையாளம் கண்டு களையெடுக்க முன்வர வேண்டும். முன்பிருந்த ஜார்ஜ் மாதிரி செயல்படாமல் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டால் மக்கள் பயன்பெறுவார்கள். ஆணையரின் நடவடிக்கையை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Label