OUR CLIENTS
கட்சி போனியாகாததால் மீண்டும் சரக்குக்கு திரும்பிய தேமுதிக மாஜி எம்எல்ஏ முட்டை வெங்கடேசன்!
கட்சி போனியாகாததால் மீண்டும் சரக்குக்கு திரும்பிய தேமுதிக மாஜி எம்எல்ஏ முட்டை வெங்கடேசன்! Posted on 05-May-2017 கட்சி போனியாகாததால் மீண்டும் சரக்குக்கு திரும்பிய தேமுதிக மாஜி எம்எல்ஏ முட்டை வெங்கடேசன்!

விழுப்புரம், மே 5-
தேமுதிக கட்சி போனியாகாததால் மீண்டும் சரக்குக்கு திரும்பி விட்டார் தேமுதிக மாஜி எம்எல்ஏ 'முட்டை' வெங்கேடசன் என்று பொதுமக்கள் தரப்பில் கூறப்படுகிறது.

அதிமுகவில் இருந்து கொண்டு விழுப்புரத்தைச் சேர்ந்த 'முட்டை' வெங்கடேசன் டேங்கர் லாரிகளில் ஆர்எஸ்ஸை ஆந்திர மாநிலம் சித்தூரில் இருந்து கடத்திக் கொண்டு வந்தும், புதுச்சேரி மாநிலத்தில் இருந்து மதுபானங்களை கடத்தி வந்தும் மொத்தமாக கைமாற்றும் வணிகத்தை செய்து வந்தார். ஆனால் இவரை யாரும் திரும்பி பார்க்கவில்லை. இந்நிலையில் பல வழக்குகளில் சிக்கி சின்னாபின்னமாமி வெளியில் வந்த முட்டை வெங்கடேசன் தேமுதிகவில் கேப்டன் விஜயகாந்த்திடம் சேர்ந்தார். மெல்ல மெல்ல அவரது தீவிர ஆதரவாளராக மாறினார்.

கேப்டனை வெங்கடேசன் விழுப்புரத்தில் வி.மருதூரில் உள்ள அவரது இல்லத்துக்கு அழைத்து வந்து தங்க வைத்து உபசரிக்கும் பணியில் ஈடுபட்டார். இதன் விளைவு மெல்ல எம்எல்ஏ சீட் கிடைத்து எம்எல்ஏவும் ஆனார். இவருக்கு டெய்லி டூப் பத்திரிகையின் நிருபர் ஒருவர் ஆஸ்தான ஆலோசகராக செயல்பட்டு வந்தார். அந்த நிருபரின் தங்கை வேறு ஒருவருடன் ஓட்டம் பிடித்த போதும் முட்டை வெங்கடேசன் உதவிகள் புரிந்ததாக அந்த தெருவாசிகள் தரப்பில் கூறப்படுகிறது.

இப்படி பல செய்திகள் உலா வருகின்றன. அந்த நிருபருக்கு வேலை இல்லாமல் ஊதாரியாக சுற்றித்திரிந்த நேரத்தில் அவரது தந்தை தனது வேலையை ராஜிநாமா செய்து விட்டு மகனுக்கு வழிவிட்ட கதையெல்லாம் விழுப்புரத்தில் உள்ளவர்களுக்கு நன்கு தெரியும். உடையாரும், நாயுடுவும் கைகோர்த்து சாராய சாம்ராஜ்யத்தில் கொடி கட்டி பறந்தார்களாம். லாரியில் கட்சி கொடியை கட்டிக் கொண்டு சாராய தொழிலை கனகசசிதமாக நடத்தி வருவதாக பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் தரப்பில் அடுக்கடுக்கான புகார்கள் கூறப்படுகின்றன.

இவ்வாறு விழுப்புரம் நகர மக்கள் கழுவி கழுவி ஊற்றுகிறார்கள். இவர்கள் காட்டும் பந்தாவுக்கு அளவே இல்லை என்று சொல்லலாம். இதுபோன்ற செய்திகள் வெளிவந்தாலும் அவர்கள் கவலைப்படுவதில்லை என்று சமூக ஆர்வலர்கள் தரப்பில் கூறப்படுகிறது. திருடனை தேள் கொட்டியது  போன்று அமுக்கி வாசிக்கிறார்களாம். தற்போது கேப்டன் கட்சி நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள முடியாமல் ஒதுங்கி ஓய்வெடுக்க ஆரம்பித்தார்.

பிரேமலதா கட்சியை வழிநடத்த ஆரம்பித்தார். இதனால் கட்சியில் இருந்து சற்று ஒதுங்கிய முட்டை வெங்கடேசன் மீண்டும் பழைய தொழிலான சரக்கு வாங்கி மொத்தமாக விற்பனை செய்து வரத் தொடங்கி விட்டார் என்று கூறப்படுகிறது. இதை மோப்பம் பிடித்த காவல் துறையில் பணியாற்றும் தனிப்பிரிவு போலீசார் மற்றும் உள்ளூர் போலீசார் ஈ போல வெங்கடேசனை மொய்க்க தொடங்கி விட்டார்களாம்.

தலைநகரம் திரைப்படத்தில் ரைட் என்று ஒருவன் சாராயம் விற்பனை செய்த போது பணம் கொட்டோ கொட்டோ என்று கொட்டியது என வசனம வரும். அதேபோன்று விழுப்புரத்தில் மறைந்த வி.மருதூர் ஏழைகளின் தலைவன் மின்னல்ராஜா, தற்போது முட்டை வெங்கடேசன் என்று கூறி புலகாங்கிதம் அடைகின்றனர் போலீசார். இவர் எம்எல்ஏவாக இருந்ததை காட்டிலும் இப்போது சாராய சாம்ராஜ்யத்தில் திளைத்து வருகிறார் என்கின்றனர் விழுப்புரம் நகரவாசிகள்.

எது எப்படியோ ஒரு புறம் சாராயம், ஒரு புறம் திருட்டு சிடி விற்பனை ராகவ் சிடி பார்க் என்ற பெயரில் கடை வைத்தும் பழைய பேருந்து  நிலையம் அருகில் நடத்தி வருகிறார் என்றும் பொதுமக்கள் தரப்பில் கூறப்படுகிறது. காவல் துறை வேடிக்கை பார்க்கிறதே தவிர அவர்களது நடவடிக்கை என்னவோ பூஜ்ஜியம்தான். இதுபோன்ற திமிங்கிலங்கள் காவல் துறை வளையத்தில் சிக்கும் நாள் வெகு தொலைவில் இல்லை என்று சமூக ஆர்வலர்கள் சூசகமாக தெரிவித்துள்ளனர்.

Label