OUR CLIENTS
வேலூரில் வீட்டு உபயோக பொருட்காட்சி என்ற பெயரில் பகல் கொள்ளை!
வேலூரில் வீட்டு உபயோக பொருட்காட்சி என்ற பெயரில் பகல் கொள்ளை! Posted on 04-May-2017 வேலூரில் வீட்டு உபயோக பொருட்காட்சி என்ற பெயரில் பகல் கொள்ளை!

வேலூர், மே 4-
வேலூர் புதிய பேருந்து நிலையம் அருகில் வீட்டு உபயோக பொருட்காட்சி என்ற பெயரில் பகல் கொள்ளை அடிப்பது தொடர்ந்து நடந்து வருகிறது. இதை மாவட்ட நிர்வாகம் தடுத்து நிறுத்தி பொதுமக்களை ஏமாற்றத்தில் இருந்து தவிர்க்க நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டும்.

வேலூர் என்றாலே குடும்பத்துடன் சென்று பொழுதுபோக்க வசதியில்லாத மாவட்டமாக உள்ளது. இந்நிலையில் இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி கொண்டு சிலர் பொருட்காட்சி, கண்காட்சி மற்றும் விற்பனை மேளா என்று பலதரப்பட்ட பெயர்களில் நுகர்வோரிடம் பணத்தை கறந்து விட்டு ஓட்டமெடுத்து விடுகின்றனர். இதுநாள் தோறும் நடந்து வருகிறது. 

இப்போது வேலூர் புதிய பேருந்து நிலையம் அருகில் சாய் சிட்டி வளாகத்தில் இவிடி எண்டர்டைன்மென்ட் இணைந்து வழங்கும் ரோபோக்களின் அட்டகாசத்துடன் மாபெரும் வீட்டு உபயோக பொருட்காட்சி நடந்து வருகிறது. இந்த கண்காட்சி தினமும் மாலை 4 மணி முதல் இரவு 10 மணி வரை நடைபெறுகிறது. இந்த கண்காட்சிக்கு அனுமதி கட்டணமாக ஒரு நபருக்கு தலா ரூ.40 வசூலிக்கப்படுகிறது. உள்ளே செல்லவே ரூ.40 கட்டணம் வசூலித்து விடுகின்றனர். பின்னர் உள்ளே சென்றால் வீட்டு உபயோக பொருட்காட்சி என்று எதுவும் இல்லை என்றே சொல்லலாம்.

இந்த அளவுக்கு மிகவும் மோசமான நிலையில் பொருட்காட்சி நடைபெறுகிறது. பொதுமக்கள் விளம்பரத்தை நம்பி உள்ளே சென்றுவிடுகின்றனர். அங்கு விற்பனை செய்யப்படும் பஞ்சு மிட்டாய் வெறும் மூங்கில் குச்சியை மட்டுமே அங்கு வாங்கும் பொதுமக்களுக்கு வழங்குகின்றனர். அங்கு எந்த தின்பண்டம் வாங்கினாலும் விலை அதிகம் ஒரு புறம் இருக்க பொருள் தரமில்லாத நிலையில் தள்ளப்படுகின்றன. மக்களை ஏமாற்றி சுரண்டும் இதுபோன்ற பொருட்காட்சிக்கு அனுமதி அளித்தது யார்? உள்ளே என்னென்ன விளையாட்டு உபகரணங்கள் உள்ளன என்று ஸ்தல ஆய்வுக்கு உட்படுத்தப்பட வேண்டும்.

வசதியில்லாமல் வசூல் மட்டுமே நோக்கமாக கொண்டு இந்த கண்காட்சி நடைபெறுகிறது. அதிகாரிகள் கையூட்டு பெற்றுக் கொண்டு இதுபோன்ற தரமில்லாத கண்காட்சிகளுக்குகு அனுமதி அளித்ததாக பொதுமக்கள் தரப்பில் குற்றஞ்சாட்டப்படுகிறது. உள்ளே சென்று பார்த்தால் அங்கு ஒன்றுமே இல்லாமல் ªவிச்சோடி காணப்படுகிறது பகலில் மக்களை ஏமாற்றி சுரண்டி பிழைக்கும் இதுபோன்ற கண்காட்சிகளுக்கு அனுமதியை ரத்து செய்ய வேண்டும் என்று வேலூர் நகர மக்கள் எதிர்பார்க்கின்றனர். சமூக ஆர்வலர்களும் இதே கருத்தைத்தான் வலியுறுத்தியுள்ளனர். ஏதோ அனுமதி கட்டணம் தலா ரூ.10 வாங்கி கொண்டு அனுமதிக்கலாம்.

இதைவிடுத்து ஒரேயடியாக ரூ.40 கட்டணம் அதிகம். உள்ளே உள்ள பொருட்களை எதை தொட்டாலும் அதுவும் விலை சற்று கூடுதலாகவே உள்ளது குறிப்பிடத்தக்கது. மாவட்ட ஆட்சியரின் நடவடிக்கையை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். எப்படி என்றால் பகல் கொள்ளைக்கு வழிவகுக்கிறாரா? தடுத்து நிறுத்த உள்ளாரா? என்பதுதான். மக்கள் பெயரை சொல்லி சத்தமின்றி வசூல் வேட்டை நடந்து வருகிறது.

Label