பத்திரிகையாளர்களை மிரட்டும் பெண் பிடிஓ கலைச்செல்வி! Posted on 03-May-2017
வேலூர், மே 3-
அலுவலகத்துக்கு தொலை பேசியில் தொடர்பு கொண்டு பத்திரிகையாளர்களை மிரட்டும் வகையில் பேசிய பேரணாம்பட்டு பெண் பிடிஓ கலைச்செல்வி மீது மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
காவல்துறை போன்று நேரம் காலம் பார்க்காமல் செயல்படும் மற்றொரு துறை பத்திரிகை துறை. விடுமுறையின்றி 24 மணி நேரம் செயல்படும் துறை என்ற பெருமையை கொண்டது பத்திரிகைதுறை. அதனால் பத்திரிகைதுறையை சார்ந்தவர்களுக்கு அரசு பல சிறப்பு நலத்திட்டங்களை வகுத்து செயல்படுத்தி வருகின்றது. ஜனநாயகம் என்பதே மக்களுக்கானது தான். ஜனநாயகத்தின் தூண்கள் மக்களுக்கான, மக்களின் உரிமைகளை காப்பாற்றும் தூண்களாக செயல்படவேண்டும்.
இந்தியாவில் ஜனநாயகத்தின் நான்கு தூண்கள் என்று சொல்லப்படும் –
1) நிர்வாகி (அரசு மற்றும் அதிகாரிகள்) - (Executive - Government)
2) சட்டமன்றம் - (Legislature - Parliament & State Assemblies, etc)
3) நீதித்துறை ( Judiciary - Supreme Court, High Court & Other Judicial centres)
4) பத்திரிகைதுறை (The Press).
இதில் பத்திரிகைதுறையை ஜனநாயகத்தின் நான்காவது தூண் என்று சொல்வார்கள். மற்ற மூன்று தூண்களின் செயல்பாடுகள் மற்றும் தகவல்களையும் பொதுமக்களிடம் கொண்டுசேர்க்கும் முக்கிய பணியை செய்வதே நான்காவது தூணான பத்திரிகைதுறையாகும்.
இதனால்தான், நான்கு தூண்களில் முக்கிய பங்கு வகிப்பது நான்காவது தூணாக செயல்படும் பத்திரிகைதுறை.
எங்கோ ஒரு கிராமத்தில் நடக்கும் விஷயங்களை நாடு முழுவதும் கொண்டு சேர்க்கும் ஒரு பாலமாக செயல்படுகின்றன.
மக்களின் பிரச்னைகளை பரவலாக இருக்கும் செய்தியாளர்கள் மூலம் ஆட்சியாளர்களிடம் கொண்டு சேர்க்க முடியும்.
இதன் மூலம் மக்களின் அறிவையும், அவர்களின் மனித ஆற்றலையும் நாட்டின் முக்கியப் பிரச்னைகளுக்கு தீர்வுகாண வழிவகை செய்கிறது.
இத்தகைய பலத்தால் தான் ஜனநாயக நடைமுறையில் பத்திரிகைதுறை சுதந்திரத்திற்கு அதிக மதிப்பும் முக்கியத்துவமும் கொடுக்கப்பட்டது.
வளர்ந்துவரும் நம் நாட்டிற்கு பத்திரிகை துறைகளின் பங்களிப்பு அத்தியாவசியமாகவும் மற்றும் மிக அதிகமாக தேவைப்படுகிறது.
அரசாங்க இயந்திரங்கள் சரியான வகையில் தங்கள் பணிகளை செய்யாத நிலையில் பத்திரிகைதுறையின் பங்களிப்பு மக்கள் பிரச்னைகளில் அதிகமாக இருக்க வேண்டும் என்பதே இந்திய ஜனநாயகத்தில் நான்காவது தூணான பத்திரிகைதுறையின் தலையாய நோக்கமாகும்.
ஆனால் முதல் தூணான அரசு அதிகாரிகளோ மக்கள் பிரச்னைகளையும், நடந்த நிகழ்வுகளையும் பத்திரிகைதுறையில் செய்திகளை வெளியிட்டால் செய்தியாளர்களை மிரட்டுவதே வேலையாக சில அதிகாரிகள் கொண்டுள்ளனர். இத்தகைய செயல் மிக கண்டிக்கதக்கது மற்றும் ஜனநாயக படுகொலையாகும். இதுபோன்ற நிகழ்வுகளை தமிழ்நாடு பத்திரிகையாளர் யூனியன்(ஜியிஹி) பொதுச்செயலாளர் கே.குமார் கண்டனம் தெரிவித்துள்ளார்.
வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வட்டார வளர்ச்சி அலுவலராக பணியாற்றுபவர் கலைச்செல்வி. இவர் நேற்றுமுன்தினம் வெங்கடசமுத்திரம் ஊராட்சியில் நடந்த கிராம சபை கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொள்ளச் சென்றார். இந்நிலையில் அங்கு கூடியிருந்த பொதுமக்கள் குடிநீர் பிரச்னையை உடனடியாக தீர்க்க வேண்டும், பல்வேறு தில்லு முல்லு வேலைகளில் தொடர்ந்து ஈடுபட்டு வரும் ஊராட்சி உதவியாளர் ராஜகம்பீரத்தை உடனே பணியிட மாற்றம் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி வட்டார வளர்ச்சி அலுவலர் கலைச்செல்வியை முற்றுகையிட்டனர். இதனால் வட்டார வளர்ச்சி அலுவலர் கலைச்செல்வி செய்வதறியாமல் திணிறிப் போனார்.
பேரணாம்பட்டு ஊராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலராக பதவி ஏற்றாரோ அன்றிலிருந்தே ஒரு சில ஊராட்சி உதவியாளர்கள் தாங்கள் பணிபுரியும் ஊராட்சிகளில் பல்வேறு தில்லு முல்லு வேலைகளில் தங்கள் விருப்பத்துக்கு ஏற்ப பணியாற்ற ஆரம்பித்து விட்டனர். இவற்றை கண்டுகொள்ளாமல் இருக்க கலைச்செல்விக்கு மாதாமாதம் கப்பம் கட்டி விடுவதாகவும் பொதுமக்கள் தரப்பில் கூறப்படுகிறது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இச்செய்தியை Ôகாலச்சக்கரம்Õ நாளிதழில் நேற்று செய்தி வெளியானது. இச்செய்தியை படித்த பெண் பிடிஓ கலைச்செல்வி, தொலைபேசியில் அலுவலகத்தை தொடர்பு கொண்டு தகாத வார்த்தைகளால் தரக்குறைவாக பேசியதும் மட்டுமில்லாமல் மிரட்டியும் உள்ளார். அவரது தொலைபேசி எண்: 9677127453.
என்னை கேட்டு விட்டுதான் நீ செய்தி வெளியிட வேண்டும். என்னை கேட்காமல் எப்படி நீ செய்தி வெளியிடலாம். நான் யார் தெரியுமா? உங்கள் அலுவலகம் எங்கு உள்ளது, அங்கேயே நான் நேரில் வந்து உங்களை ஒழித்துவிடுவேன் என்று அதிகாரத்தோரனையில் மிரட்டி பேசினார். அங்கு அலுவலகம் இல்லாதபடி செய்து விடுவேன் என்று அதட்டினார்.
அரசு அலுவலர்கள், மக்களுக்கு அரசு திட்டங்களை கொண்டு செல்லும் பொறுப்பான பணியை செய்து வருகின்றனர். இதுபோன்ற சிலர், தங்கள் பொறுப்புணர்வை மறந்து செயல்படுகின்றனர். ஆனால் பிடிஓ கலைசெல்வி அவர்களோ அதற்கு ஒரு படி மேலே சென்று ........ மிரட்டும் வேலையில் ஈடுபடுகின்றார். இதனால் இதுபோன்ற நபர்கள் மீது மாவட்ட நிர்வாகம் துறைரீதியான நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டும்.
இந்திய ஜனநாயகத்தின் நான்காவது தூண் என்று மதிக்கப்படும் செய்தி துறையை மிரட்டி பார்க்கும் வேலையில் பேரணாம்பட்டு பிடிஓ கலைச்செல்வி ஈடுபட்டது வன்மையாக கண்டிக்கத்தக்கது.
பணத்துக்காக எதையும் செய்யும் இதுபோன்ற அதிகாரிகள் இருக்கும் வரை அந்தப்பகுதி வாழ் மக்கள் வாழ்வில் வளம் ஏதும் கிடைக்காது என்பது மட்டும் நிதர்சனமான உண்மையாகும். இவர் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்க மாவட்ட நிர்வாகம் முன்வர வேண்டும் என்பதே அனைவரது எதிர்பார்ப்பாக உள்ளது.
“எங்கு குறையிருப்பின் கோடிட்டுக் காட்டுவதும், நிறையிறுப்பின் நெஞ்சாரப் பாராட்டுவதும்” உண்மையை உரக்கச் சொல்லும் மக்கள் சார்பு நாளிதழ். இது ஜனநாயகத்தின் குரல்.