OUR CLIENTS
பூட்டியே கிடக்கும் சேவை மைய கட்டடம்!
பூட்டியே கிடக்கும் சேவை மைய கட்டடம்! Posted on 02-May-2017 பூட்டியே கிடக்கும் சேவை மைய கட்டடம்!

பாப்பிரெட்டிபட்டி, மே 2-
பாப்பிரெட்டிபட்டியில் ஒன்றியத்துக்கு உட்பட்ட பி.துறிஞ்சம்பட்டியில் கட்டி முடிக்கப்பட்டு பயன்பாட்டுக்கு வராமல் பூட்டியே கிட்கும் சேவை மைய கட்டடத்தை திறந்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என்று பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிபட்டி தொகுதிக்கு உட்பட்ட பொம்மிடி ஊராட்சியில் சுமார் ரூ.7 லட்சம் மதிப்பீட்டில் செலவு செய்து சேவை மைய கட்டடம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இந்த கட்டடம் பல மாதங்களாக பூட்டியே வைக்கப்பட்டுள்ளதால் கட்டடம் பாழாகும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. ஆதலால் இந்த கட்டடத்தை விரைவில் திறந்து வைத்து பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்த ஊராட்சியானது மிகவும் பின்தங்கிய மக்கள் வசிக்கும் பகுதியாகும். குறிப்பாக விவசாயிகள் நிறைந்த பகுதியாகும். அன்றாட தேவைகளை கூட பூர்த்தி செய்து கொள்ள முடியாத நிலையில் வறுமையில் தொடர்ந்து வாடுகின்றனர். 

இந்த பகுதியில்தான் கடந்த ஆண்டு பொதுமக்களின் தேவைக்காக ஊராட்சி நிதியில் இருந்து சேவை மைய கட்டடம் கட்டப்பட்டது. ஓராண்டுக்கு மேல் ஆகியும் இந்த புதிய கட்டடம் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படாமல் இருந்து வருகிறது. இப்படி காலம் தாழ்த்த என்ன காரணம் என்று தெரியவில்லை. இல்லை அரசியல்வாதிகள் தொல்லை காரணமா? என்பதும் தெரியவில்லை. ஊராட்சி நிர்வாகமும் கட்டடத்தை திறந்துவிட முன்வரவில்லை.

இதனால் அரசுக்கு ஓராண்டாக வருமான இழப்பு இருந்து வருகிறது. மேலும் இந்த சேவை மைய கட்டடத்துக்கு இதுவரை மின்இணைப்பும் பெறாமல் உள்ளது மேலும் சந்தேகத்தை வலுக்கச் செய்கிறது. இந்த கட்டடம் இரவு, பகல் பாராமல் மது அருந்துபவர்களுக்கும், சமூக விரோதிகள் கூடாரமாகவும் மெல்ல மெல்ல மாறி வருகிறது. விபச்சாரிகளுக்கு அரணாக திகழ்கிறது. சேவை மைய கட்டடம் சமூக விரோதிகளுக்கு சேவை செய்யும் இடமாக மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

இப்படி சமூக விரோதிகளின் கூடாரமாக விளங்கும் இந்த கட்டத்தை மீட்டெடுக்க அரசும், அரசு அதிகாரிகளும்  விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்கள்  மற்றும் பொதுமக்களின் ஒட்டுமொத்த எதிர்பார்ப்பாக உள்ளது. மாவட்ட நிர்வாகத்தின் நடவடிக்கையை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Label