OUR CLIENTS
வெங்கடசமுத்திரத்தில் பெண் பிடிஓ முற்றுகை!
வெங்கடசமுத்திரத்தில் பெண் பிடிஓ முற்றுகை! Posted on 02-May-2017 வெங்கடசமுத்திரத்தில் பெண் பிடிஓ முற்றுகை!

பேரணாம்பட்டு, மே 2-
பேரணாம்பட்டு அடுத்த வெங்கடசமுத்திரம் ஊராட்சியில் பணியாற்றும் ஊராட்சி உதவியாளரை மாற்றக் கோரி பெண் பிடிஓவை பொதுமக்கள் திடீர் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பேரணாம்பட்டு ஊராட்சி ஒன்றியம், வெங்கடசமுத்திரம்  ஊராட்சியில் மே தின சிறப்பு கிராம சபை கூட்டம் நேற்று காலை 10 மணிக்கு நடைபெற இருப்பதாக அறிவிக்கப்பட்டது. 

இதில் கலந்து கொள்ள வட்டார வளர்ச்சி அலுவலர் கலைச்செல்வி வெங்கட சமுத்திரத்துக்கு வருகை தந்தார். ஆனால் அங்கு கூடியிருந்த பொதுமக்கள் குடிநீர் பிரச்னையை உடனடியாக தீர்க்கக் வேண்டும், பல்வேறு தில்லு முல்லு வேலைகளில் தொடர்ந்து ஈடுபட்டு வரும் ஊராட்சி உதவியாளர் ராஜகம்பீரத்தை உடனே பணியிட மாற்றம் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி வட்டார வளர்ச்சி அலுவலர் கலைச்செல்வியை முற்றுகையிட்டனர்.

இதனால் வட்டார வளர்ச்சி அலுவலர் கலைச்செல்வி செய்வதறியாமல் திணறிப் போனார். பேரணாம்பட்டு ஊராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலராக பதவி ஏற்றாரோ அன்றிலிருந்தே ஒரு சில ஊராட்சி உதவியாளர்கள் தாங்கள் பணி புரியும் ஊராட்சிகளில் பல்வேறு தில்லு முல்லு வேலைகளில் தங்கள் விருப்பத்துக்கு செய்ய ஆரம்பித்து விட்டனர். இவற்றை கண்டு கொள்ளாமல் இருக்க கலைச்செல்விக்கு மாதா மாதம் கப்பம் கட்டி விடுவதாகவும் பொது மக்கள் தரப்பில் கூறப்படுகிறது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்ப்படுத்தியுள்ளது. பொதுமக்கள் கூட்டத்தை நடத்த விடாமல் முற்றுகையிட்டதால் பிடிஓ கலைச்செல்வி தலைதெறிக்க ஓடி மறைந்தார். 

Label