OUR CLIENTS
உலக நாயகன் நடித்த ஒரு பிரபலமான ஜவுளி நிறுவனத்தில் தரமில்லாத ரகங்கள்!
உலக நாயகன் நடித்த ஒரு பிரபலமான ஜவுளி நிறுவனத்தில் தரமில்லாத ரகங்கள்! Posted on 01-May-2017 உலக நாயகன் நடித்த ஒரு பிரபலமான ஜவுளி நிறுவனத்தில் தரமில்லாத ரகங்கள்!

சென்னை, மே 1-
சென்னை உள்ளிட்ட தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள பிரபல ஜவுளி நிறுவனம் தரமில்லாத ஜவுளி ரகங்களை விற்பனை செய்து வருகின்றது என்று வாடிக்கையாளர்கள் குற்றஞ் சாட்டி உள்ளனர். 

இதனால் நுகர்வோர் கடும் பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர். சென்னையில் மட்டுமல்லாது புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் ஜவுளி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் இங்கு விற்பனை செய்யப்படும் துணிரகங்கள் அனைத்தும் தரமற்றவையாக உள்ளன. அத்துடன் விரைவில் மக்கி கிழிந்து போகின்றன என்று நுகர்வோர் தரப்பில் குற்றஞ்சாட்டப்படுகிறது. இதுகுறித்து கடைக்கு சென்று தட்டிக் கேட்டால் சரியான பதில் ஏதும் தராமல் நுகர்வோரை மிரட்டி அனுப்புகிறார்களாம். இதுபோன்று கிளை நிறுவனங்கள் அனைத்தும் செயல்படுவதாக நுகர்வோர் தரப்பில் கூறப்படுகிறது. இங்கு பணியாற்றுவோர் தான்தோன்றி தனமாக பேசுவதாகவும், வாடிக்கையாளர்களை மரியாதை குறைவாக நடத்துவதாகவும், ஒருமையில் அழைப்பதாகவும் குற்றஞ்சாட்டப்படுகிறது. 

இந்த நிறுவனம் அண்மையில் கருப்பு பணத்தை மாற்ற முயன்று கோடிக்கணக்கில் சிக்கி தணிக்கை நடந்தது குறிப்பிடத்தக்கது. தற்போது மீண்டும் பல சிக்கல்களுக்கு இடையில் மீண்டும் திறந்து நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிறுவனம் தரமற்ற ஜவுளிகளை சூரத் போன்ற மில்களில் இருந்து கொண்டு வந்து விலைமலிவாக வாங்கி விலை அதிகமாக வைத்து விற்பனை செய்து வருகிறது இந்த ஜவுளி நிறுவனம். இதனால் வேகமாக இந்த நிறுவனம் வளர்ந்து வருகிறது.

சூரத்தில் இதுபோன்ற மில்களை வைத்து கொண்டு கொள்ளை லாபம் பார்த்து வருகிறது இந்த நிறுவனம். சென்னையில் உள்ள இந்த நிறுவனத்தின் பித்தலாட்ட விற்பனையை பற்றி தெரிந்து கொள்ளாமல் பல நுகர்வோர் (வாடிக்கையாளர்கள்) வேலூர், அரக்கோணம், விழுப்புரம், திண்டிவனம், திருவள்ளூர் போன்ற ஊர்களில் இருந்து சென்று துணி ரகங்களை வாங்கி வருகின்றனர். அது 2 அல்லது 3 மாதங்களுக்குள் பல் இளிக்க தொடங்கி விடுகிறது. இதனால் பலரது சாபத்துக்கும் வயிற்றெரிச்சலுக்கும் இந்த நிறுவனம் ஆளாகி வருவது குறிப்பிடத்தக்கது. 

ரெடிமேட் வகைகள் அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுகின்றன. கருப்பு பணத்தை வெள்ளையாக்கவே இந்த  நிறுவனம் நடத்தி வருகிறார்கள் என்ற தகவலும் உலாவி வருகின்றது. 

வாடிக்கை யாளர்களை கவரும் வகையில் கவர்ச்சிகர விளம்பரங்களை வெளியிட்டு விட்டு பல கோடி கருப்பு பணத்தை வெள்ளையாக மாற்றும் பகீரத முயற்சியில் இந்நிறுவனம் செயல்பட்டு வருகிறது. தொழில் போட்டியில் உலக நாயகன் கமல்ஹாசனை விளம்பர தூதராக வைத்து விளம்பரங்களை தயாரித்து இந்த நிறுவனம் வெளியிட்டு லாபம் பார்த்து வருகிறது. கமல்ஹாசன் நடிப்பதால் இந்த நிறுவனம் நம்பிக்கையானதாக இருக்கும் என்று மக்களும் நம்பி துணிரகங்களை வாங்க வருகின்றனர்.  

இனிவரும் காலங்களில் வாடிக்கையாளர்கள் விலை மற்றும் துணியின் தரம் போன்றவற்றை பார்த்து வாங்க முன்வர வேண்டும். இதை விடுத்து கவர்ச்சிகர விளம்பரங்களை பார்த்து ஏமாற வேண்டாம்  என்ற நோக்கிலும்  மற்றும்  நுகர்வேர்களின் வேண்டுகோள்படி இந்த செய்தியை காலச்சக்கரம் நாளிதழ் வெளியிடுகிறது. உண்மை நிலையை உணர்ந்து நடந்து கொண்டால் அனைத்தும் நலன் பயக்கும். மிக விரைவில் இந்த நிறுவனத்தின் தொடர்பான செய்தி மற்றும் படங்கள் பெயருடன் வெளியிடப்படும்.

Label