OUR CLIENTS
'காலச்சக்கரம்' செய்தி எதிரொலி... திருவள்ளூர் பிஆர்ஓ அதிரடி இடமாற்றம்!
'காலச்சக்கரம்' செய்தி எதிரொலி... திருவள்ளூர் பிஆர்ஓ அதிரடி இடமாற்றம்! Posted on 20-May-2017 'காலச்சக்கரம்' செய்தி எதிரொலி... திருவள்ளூர் பிஆர்ஓ அதிரடி இடமாற்றம்!

வேலூர், மே 20-
'காலச்சக்கரம்' செய்தி எதிரொலி 12 பிஆர்ஓக்கள் அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதில் திருவள்ளூர் பிஆர்ஓவும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.

'காலச்சக்கரம்' நாளிதழ் திருவள்ளூர் மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலராக பணியாற்றிய தனபால் திருவள்ளூரில் செய்தியாளர்கள் பெயரைச் சொல்லி கொள்ளையடித்தது தொடர்பாக அண்மையில் விரிவாக செய்தி வெளியிடப்பட்டது. இதனால் திருவள்ளூர் பிஆர்ஓ தனபால் அதிரடியாக தூக்கியடிக்கப்பட்டு 
தஞ்சாவூருக்கு பணியிடமாற்றம் செய்யப்பட்டார். இவருடன் மந்தமாக செயல்பட்ட 11 பேர் உட்பட 12 பேர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். 

மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு துறை அலுவலர்கள் செய்தியாளர்கள் பெயரைச் சொல்லி செல்லும் இடமெல்லாம்  வசூல் வேட்டை நடத்தவதை பரவலாக செய்து வருகின்றனர். செய்தியாளர்களை அவர்கள் மதித்து நடப்பதில்லை. செய்தியாளர்களுக்கு துரை ரீதியாக வழங்க வேண்டிய இலவச பேருந்து பயண  அட்டை, ஊடகம் என்ற ஸ்டிக்கர் ( இருசக்கர வாகனங்களில் ஒட்டுவது), அரசு வழங்கும் அடையாள அட்டை (அக்ரிடேஷன் கார்டு) இவைகள் ஆண்டுக்கு ஒரு முறை வழங்க வேண்டும். 

தினமும் நடைபெறும் அன்றாட நிகழ்வுகளில் இடம்பெறும் அரசு தொடர்பான செய்திகளை சேகரித்து செய்திகுறிப்பு வாயிலாக செய்தியாளர்களது மெயிலுக்கு அனுப்புவதுதான் இவர்களது வேலை. இந்த வேலையை மட்டும் சரிவர செய்யாமல் செய்தியாளர்களை கேள்வி கேட்பது, ஏன் அரசுக்கு எதிரான செய்திகளை வெளியிடுகிறீர்கள் என்று ஏதாவது கேள்விகளை கேட்டு வீண்வாதம் செய்வதை ஒரு சில பிஆர்ஓக்கள் வாடிக்கையாக கொண்டுள்ளனர். 

பல செய்தியாளர்கள் இன்று பிரஸ் ஸ்டிக்கர் இல்லாமல் தங்களது வாகனங்களை இயக்கி வருகின்றனர். இவர்கள் அரசு அலுவலர்கள் போல செயல்படாமல் முதலாளிகள் போன்று செயல்படுகின்றனர். இவர்களுக்கு ஜால்ரா போடும் செய்தியாளர்களை கண்டறிந்து அவர்களுக்கு பிஆர்ஓக்கள் கூஜா தூக்குவது அனைத்து வசதிகளையும் செய்து தருகிறார்கள். 

குறிப்பாக வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் பத்திரிகையாளர்கள் அல்லாத பலர் திருட்டுத்தனமாக பத்திரிகையாளர்கள் போர்வையில் தங்கியுள்ளனர். இவற்றையெல்லாம் கணக்கெடுப்பு நடத்தி அதுபோன்றவர்களை வீட்டை காலி செய்ய வைக்க வேண்டும். செய்தியாளர்களுக்கு தர வேண்டும் என்று சொல்லி தீபாவளி, பொங்கல், புத்தாண்டு காலங்களில் பலரிடம் கையேந்தி வசூல் வேட்டையை கனக்கச்சிதமாக நடத்துகிறார்கள் செய்தி மக்கள் தொடர்பு அலுவலர்கள். 

எங்கு சென்றாலும் பணமின்றி எதுவும் நடக்காது. இதைத்தான் தாரக மந்திரமாக கொண்டு செயல்படுகின்றனர். இவர்களது அட்டகாசம் தாங்கவில்லை. கேட்டால் செய்தியாளர்கள்தான் பணம் கேட்டு தொந்தரவு செய்கின்றனர் என்று மாவட்ட ஆட்சியர் மற்றும் செய்தித்துறை இயக்குநர் போன்றோரிடம் சொல்லி விட்டு தப்பி விடுகின்றனர். 

இவர்கள் செய்திக்கு பணம் வாங்குவதும் லஞ்சம்தான் என்பதை அவர்கள் உணர வேண்டும். எந்த செய்தியாளருக்கும் பணம் தராமல் நிறுத்தி கொள்ளுங்கள். அவர்களுக்கு தர வேண்டிய முறையான ஸ்டிக்கர், பஸ் பாஸ், செய்தியாளர் அடையாள அட்டையை வாங்கி தருவதற்கு பழகுங்கள் பிஆர்ஓக்களே. 

தவறான பாதைக்கு செய்தியாளர்களை அழைத்து செல்வதை தவிர்த்து கொள்ளுங்கள். இனி வரும் காலங்களில் பிஆர்ஓக்கள் அனைத்து செய்தியாளர்களிடமும் நட்பு ரீதியில் பழக முன்வர வேண்டும். அவர்களுக்கு செய்திகளை தருவது, தகவல் தெரிவிப்பது போன்ற பணிகளை மட்டும் பார்த்தால் மட்டுமே போதும். மற்ற எதையும் (புரோக்கர்கள்) வசூல் செய்ய வேண்டியதில்லை பிஆர்ஓக்கள். 

இனி அவர்களது செயல்பாடு மாறுகிறதா இல்லை அப்படியே தொடருகிறதா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். 

செய்தி மக்கள் தொடர்பு அலுவலர்கள் 12 பேர் இடமாற்றம்!

பெயர் - தற்போதைய பதவி - புதிய பதவி
தனபால் - திருவள்ளூர் - தஞ்சாவூர்
விக்னேஷ் - மாநகராட்சி திருப்பூர் - ஈரோடு 
ரவிச்சந்திரன் - ஈரோடு - கடலூர்
அருணகிரி - ஒழுங்குமுறை விற்பனைக்கூடம் - சென்னை கலைவாணர் அரங்கம்
தயாளன் - காத்திருப்போர் பட்டியல் - ஒழுங்குமுறை விற்பனைக்கூடம்
விஜயலட்சுமி - வரவேற்பு தலைமைச்செயலகம் - அண்ணா நினைவிடம்
இளவரசி - காத்திருப்போர் பட்டியல் - கன்னியாகுமரி
கதிரவன் - காத்திருப்போர் பட்டியல் - போக்குவரத்து கழகம் விழுப்புரம்
கோவலன் - காத்திருப்போர் பட்டியல் - ஆவின் நிறுவனம்
பாரதிதாசன் - திருவாரூர் - தர்மபுரி
நெடுமாறன் - மாநகராட்சி திருச்சி - மாநகராட்சி கோவை
கலையரசன் - மின்வாரியம் சென்னை - தஞ்சாவூர்

“எங்கு குறையிருப்பின் கோடிட்டுக் காட்டுவதும், நிறையிறுப்பின்  நெஞ்சாரப் பாராட்டுவதும்” எங்களது நாளிதழின் தனித்தன்மை.  உண்மையை உரக்கச் சொல்லும் மக்கள் சார்பு நாளிதழ்

Label