OUR CLIENTS
வேலூர் பி.ஆர்.ஓ.-வை ஆட்டிப்படைக்கும் ஏ.பி.ஆர்.ஓ. அசோக்குமார்!
வேலூர் பி.ஆர்.ஓ.-வை ஆட்டிப்படைக்கும் ஏ.பி.ஆர்.ஓ. அசோக்குமார்! Posted on 22-May-2017 வேலூர் பி.ஆர்.ஓ.-வை ஆட்டிப்படைக்கும் ஏ.பி.ஆர்.ஓ. அசோக்குமார்!

வேலூர், மே 22-
வேலூர் மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு துறை அலுவலர் ச.இளங்கோவை ஆட்டிப்படைக்கும் வேலையில் ஈடுபட்டுள்ளார் உதவி செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் அசோக்குமார். இந்த பிரச்னையில் தலையிடாமல் கண்டும் காணாமல் மௌனம் சாதித்து வருகிறாரா? மாவட்ட ஆட்சியர் ராமன். இதற்கு நிரந்தர தீர்வு காண்பது எப்போது? செய்தியாளர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக் கிடக்கின்றனர். 

வேலூர் மாவட்டம் மிகவும் பின்தங்கிய மாவட்டமாகும். கல்வி மட்டுமன்றி வளர்ச்சியிலும் பின்தங்கியே காணப்படுகிறது. வேலூர் மாவட்டத்தில் செய்தி மக்கள் தொடர்பு துறை அலுவலராக பணியாற்றுபவர் ச.இளங்கோ. இவர் வேலூர் மாவட்டத்திற்கு பணியமர்த்தப்பட்ட பின்னரும், சுதந்திரமாக செயல்பட முடியாமல் அமைதியாக ஓரங்கட்டப்பட்டு விட்டார். இதற்கு காரணம் உதவி செய்தி மக்கள் தொடர்பு  அலுவலராக பணிபுரியும் அசோக்குமார்தான். இவர் வேலூரில் அடிக்கும் லூட்டிகளுக்கு அளவே இல்லை. அளவில்லா அதிகாரம் உடையவராக வலம் வருகிறார். இவரைப் பார்த்தாலே செய்தி மக்கள் தொடர்பு துறை அலுவலகத்தில் உள்ளவர்கள் அஞ்சி நடுங்குகின்றனர். 

தமிழக வணிகவரித்துறை அமைச்சர் வீரமணிக்கு வேண்டியவர், நெருக்கமானவர் என கூறிகொண்டு அவரது பெயரை தவறாக பயன்படுத்தி பிஆர்ஓ இளங்கோவை ஆட்டிப்படைக்கிறார் அசோக்குமார். இதனால் அவரது பெயரைச் சொல்லி பலரையும் அசோக்குமார் மிரட்டி வருகிறார். இதனால் அமைச்சர் வீரமணி பெயருக்கும், அதிமுக ஆட்சிக்கும் களங்கம் ஏற்படுகின்றது. எதற்கெடுத்தாலும் செய்தி மக்கள் தொடர்பு துறை அலுவலர் இளங்கோவை நாடினால் ஏபிஆர்ஓ அசோக்குமாரை பாருங்கள் என்று அனுப்பி விட்டு அமைதியாக தனது இருக்கையில் அமர்ந்துகொள்கிறார் இளங்கோ. 

இதற்கு முன்னர் வேலூர் பிஆர்ஓ அலுவலகத்தில் பணியாற்றிய பலர் இடமாற்றம் செய்யப்பட்டு பல்வேறு இடங்களுக்கு மாறுதலாகிச் சென்று விட்டனர். ஆனால் அசோக்குமார் வேலூரில் நிரந்தரமாக தங்கி, ஆணி அடித்து உட்கார்ந்து விட்டார். வேலூர் மாவட்டத்தில் பணியாற்றும் செய்தியாளர்கள் சென்று மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு துறை அலுவலகத்தில் தங்களுக்கு தேவையான அரசு வழங்கும் செய்தியாளர் அங்கீகார அடையாள அட்டை (அக்ரிடேஷன் கார்டு), இலவச பேருந்து பயண அட்டை, இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களுக்கான பிரஸ் ஸ்டிக்கர் போன்றவற்றை  கேட்டு செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இளங்கோவை நாடினால், அவர் ஏபிஆர்ஓ அசோக்குமாரை பாருங்கள் என்று கூறி அனுப்பி விடுகிறார்.  

ஏபிஆர்ஓ-விடம் சென்று கேட்டால் குறிப்பிட்ட மூன்று பத்திரிகைகளுக்கு தவிர பிற பத்திரிகைகளுக்கு மாவட்ட ஆட்சியர் ராமன் எதுவும் தர வேண்டாம் என்று உத்தரவிட்டுள்ளார் என்று ஒரு பிட்டை போட்டு விட்டு இவர் தப்பித்து கொள்கிறார். 

இதனால் மாவட்ட ஆட்சியர் ராமன் பெயர் பத்திரிகையாளர்கள் மத்தியில் கெட்டு வருகிறது. முன்பெல்லாம் வேலூரில் மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலராக இருந்த விஜயகுமார் பணிபுரிந்த காலம் வரையில் மெயிலில் பத்திரிகை அலுவலகங்களுக்கு அனுப்பப்படும் செய்திகள் வேர்டு ஃபைலில் தட்டச்சு செய்து அனுப்பி வைக்கப்படும். செய்தி தொடர்பான மாவட்ட ஆட்சியர் புகைப்படங்கள் அனுப்பி வைக்கப்படும். மற்ற மாவட்டங்களில் இருந்து வரும் செய்திகள் புகைப்படத்துடனும், வேர்டு ஃபைலில்தான் அனுப்பப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

அரசு தலைமை செயலகத்தில்கூட  வேர்டு ஃபைலில் தட்டச்சு செய்து அனுப்பி வைக்கின்றனர். ஆனால் வேலூர் பிஆர்ஓ அலுவலகத்தில் இருந்து  வரும் செய்திக்குறிப்புகள் ஸ்கேன் செய்து அனுப்பி வைக்கப்படுகிறது. போட்டோக்களை அனுப்புவதே இல்லை. இப்படி தான் செய்யவேண்டிய வேலைகளைகூட சரிவர செய்வதில்லை வேலூர் செய்தி  மக்கள் தொடர்பு துறை. அதேபோல தான் செய்யவேண்டிய வேலையை சரிவர செய்யாமல்,  தான் தோன்றித்தனமாக பிஆர்ஓவை ஆட்டி வைக்கிறார் அசோக்குமார். அளவில்லா அதிகாரம் இவருக்கு கொடிக்கட்டி பறக்கிறது. இவரால் அமைச்சர் மற்றும் ஆட்சியர் பெயருக்கு களங்கம் ஏற்படுகிறது குறிப்பிடத்தக்கது. 

 வேலூரில் மட்டும் அராஜகப் போக்கு கையாளப்படுகிறது. இதுபோன்ற தான்தோன்றித்தனமாக நடக்கும் அதிகாரிகளை அரசு காத்திருப்போர் பட்டியலில் வைத்து அழகு பார்க்க வேண்டும்.

இதற்கிடையே ஒரு சில செய்தியாளர்கள் தங்கள் அலுவலகத்தில் தரும் செய்தியாளர் மற்றும் புகைப்படக் கலைஞர்கள் தொடர்பான பணிநியமன கடிதங்களை செய்தி மக்கள் தொடர்பு துறை அலுவலரிடம் கொடுத்து விட்டு பஸ் பாஸ், அக்ரிடேஷன் கார்டு, பிரஸ் ஸ்டிக்கர் கேட்டால் அசோக்குமார் விலை பட்டியல் சொல்லி அதிர்ச்சியடையச் செய்கிறார். 

ஆனால் பத்திரிகையாளராக இல்லாதவர்களுக்குகூட பஸ் பாஸ்களை விற்பனை செய்கிறார் பலே கில்லாடி அசோக்குமார். இவரது வேலை ஒரு பத்திரிகையானது முறையாக மத்திய அரசின் கீழ் ஸிழிமி அங்கீகாரம் பெற்றுள்ளதா என்பதை மட்டுமே உறுதிப்படுத்தி கொண்டு அவர்களுக்கு அரசு வழங்கும் சலுகைகள் அனைத்தையும் வழங்கவேண்டும். அதற்குதான் அரசு இவர்களை பணி நியமனம் செய்துள்ளது. 

அதை மறந்துவிட்டு, இந்த பத்திரிகை அந்த பத்திரிகை என்று இவர் பாகுபாடு பார்க்கவேண்டிய அவசியமில்லை. இவர் கூறும் அந்த மூன்று பத்திரிகைக்கு மட்டும் அரசு செய்தி வெளியிடச் சொல்லவேண்டும். அரசு பத்திரிகையாளருக்கு எந்தச் சலுகையும் சும்மா செய்யவில்லை என்பதை இவர் நினைவு கூர்ந்து பார்க்கவேண்டும். 

அரசு செய்திகளை அச்சடித்து மக்களிடம் கொண்டு சேர்க்கும் வேலையை பத்திரிகைகள்தான் செய்கின்றன, தவிர ஏபிஆர்ஓ அசோக்குமார் செய்யவில்லை. செய்தியாளர்களிடம் பிரஸ் ஸ்டிக்கர், பஸ்பாஸ் இவற்றிற்கு விலை பேசுகிறார் ஏபிஆர்ஓ. அரசு செய்திகளை வெளியிட நாங்கள் விலைபேசவா? என்று செய்தியாளர்கள் கொக்கரிகின்றனர். 

அரசாணையை பின்பற்றி எதையும் இவர் செயல்படுத்துவதில்லை. அரசாணையை மதிப்பதே இல்லை, மாற்றாக மிதிக்கிறார் என்றுதான் சொல்ல வேண்டும். பத்திரிகையாளர்களுக்கு தரும் சலுகைகளை தட்டிப்பறிக்கும் அதிகாரத்தை இவருக்கு தந்தது யார்?.

அமைச்சர் வீரமணி பெயரைச் தவறாக பயன்படுத்தி ஏபிஆர்ஓ அசோக்குமார் முரணான வேலைகளில் ஈடுபடுகின்றார். இதனால் அமைச்சரின் பெயரை கெடுக்கும் விதத்திலேயே இவரது நடவடிக்கை நகர்ந்து கொண்டிருக்கின்றது. 

அதுமட்டுமன்றி அண்மையில் போக்குவரத்து ஊழியர்கள் போராட்டத்தை பார்வையிட அமைச்சர் வீரமணி, மாவட்ட ஆட்சியர் ராமன், மாவட்ட  காவல் கண்காணிப்பாளர் பகலவன் உட்பட அதிகாரிகளும் உடன் சென்றனர். இச்செய்திக்குறிப்பில் அனைவரது பெயரையும் குறிப்பிட்டிருந்தனர். ஆனால் மாவட்ட ஆட்சியர் பெயர் முழுவதுமாக விடுபட்டிருந்தது. மாவட்ட ஆட்சியருக்கு எதிராக இதுபோன்று இருட்டடிப்பு வேலையும் அவ்வப்போது செய்துவருகின்றார் இந்த பலே கில்லாடி ஏபிஆர்ஓ. 

இதுகுறித்து உரிய விசாரணை நடத்தி இதுபோன்ற களைகளை தமிழக அரசு செய்தித்துறை களைய விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று செய்தியாளர்கள் எதிர்பார்க்கின்றனர். இதே சோளிங்கர் தொகுதி எம்எல்ஏவாக உள்ளவரது சகோதரர் வேலூர் மாவட்ட உதவி செய்தி மக்கள் தொடர்பு அலுவலராக பணியாற்றி வருகிறார். ஆனால் அவர் இருக்கும் இடம் தெரியாமல் உள்ளார். ஆனால் அசோக்குமாரோ ஆடாத ஆட்டமெல்லாம் ஆடுகிறார். செய்தியாளர்களிடமே வசூல் வேட்டையை ஆரம்பித்து விட்டார் என்றால் மற்றவற்றை சொல்லித்தெரிய வேண்டியதில்லை. அமைச்சர் வந்தால் கூட புகைப்படம் அனுப்புவதில்லை பிஆர்ஓ அலுவலகம். இதோடு மட்டுமன்றி எந்த ஒரு நிகழ்ச்சிக்குச் சென்றாலும் செய்தியாளர்கள் பெயரைச் சொல்லி வசூல் வேட்டை நடத்தி விடுகிறார் பலே கில்லாடியான அசோக்குமார். இதுபோன்று பல குற்றச்சாட்டுகள் செய்தியாளர்களிடையே மேலோங்கி  நிற்கின்றது. 

வேலூர் மாவட்டத்திற்கு இவர் தேவையா என்பதையும், இவரது சேவை தேவையா என்பதையும் ஆட்சியரும், செய்தி மக்கள் தொடர்பு துறை இயக்குநரும்தான் முடிவு செய்ய வேண்டும். அதுவரை நாம் என்ன நடக்கிறது என்பதை பொறுத்திருந்துதான் வேடிக்கை பார்க்க வேண்டும். 

செய்தியாளர்களுக்கு சேவை செய்ய அரசால் அனுப்பப்பட்ட பிரதிநிதிகள் செய்தியாளர்களை மிரட்டி வசூல் செய்யப் பார்ப்பது கேவலமாக உள்ளது. வேலியே பயிரை மேய்ந்த கதையாக உள்ளது ஏபிஆர்ஓ அசோக்குமாரின் வேலை. இது எந்த வகையில் நியாயம் என்று அரசுதான் நிரந்தர முடிவு சொல்ல வேண்டும். 

அதாவது அரசுக்காக மக்களா? மக்களுக்காக அரசா? என்பது போல இந்த ஏபிஆர்ஓவுக்காக செய்தியாளர்களா அல்லது செய்தியாளர்களுக்காக ஏபிஆர்ஓ? என்பதை அரசு உடனே தெளிவுபடுத்த வேண்டும். வேலூர் மாவட்ட செய்தியாளர்கள் பலர் அந்த முடிவுக்காக ஆவலுடன் காத்திருக்கின்றனர். 

செய்தியாளர்கள் மத்தியில் பல கேள்விகள்...
1. உண்மையில் மாவட்ட ஆட்சியர் பத்திரிகையாளர்களுக்கு பிரஸ் ஸ்டிக்கர், பஸ் பாஸ் அளிக்க வேண்டாம் என்று உத்தரவிட்டுள்ளாரா?
2. ஏபிஆர்ஓ அடிக்கும் கொட்டம் மாவட்ட ஆட்சியருக்கு தெரியுமா-?   
3. மாவட்ட ஆட்சியருக்கு தெரிந்தும் மௌனம் காக்கின்றாரா? 
4. அமைச்சர் வீரமணி பெயரைக் கூறி சக அதிகாரிகளை மிரட்டி வருவதால் அமைச்சர் பெயருக்கு களங்கம் ஏற்படுவது அமைச்சர் காதுகளுக்கு செல்லவில்லையா-?  
5. ஏபிஆர்ஓ  செயலால் பத்திரிகையாளர்கள் மத்தியில் அமைச்சருக்கு அவப்பெயர் ஏற்படுவதை ஏபிஆர்ஓ மறந்து விட்டாரா? 
6. அரசுக்காக மக்களா? மக்களுக்காக அரசா? 
7. ஏபிஆர்ஓவுக்காக செய்தியாளர்களா அல்லது செய்தியாளர்களுக்காக ஏபிஆர்ஓவா? 

இப்படி ஏழாம் பொருத்தத்துடன் வேலை செய்யும் ஏபிஆர்ஓ-க்கு வாழ்த்துக்கள்...

இதேநிலை தொடர்ந்து நீடித்தால் பத்திரிகையாளர்கள் மத்தியில் அமைச்சருக்கும், மாவட்ட ஆட்சியருக்கும் அவப்பெயர் ஏற்படுவது உறுதி....

Label