OUR CLIENTS
ஐ.ஏ.எஸ்., பயிற்சி மைய மாணவி மர்ம மரணம்... நடவடிக்கை எடுக்க கோரி உறவினர்கள் மறியல்!
ஐ.ஏ.எஸ்., பயிற்சி மைய மாணவி மர்ம மரணம்... நடவடிக்கை எடுக்க கோரி உறவினர்கள் மறியல்! Posted on 22-May-2017 ஐ.ஏ.எஸ்., பயிற்சி மைய மாணவி மர்ம மரணம்... நடவடிக்கை எடுக்க கோரி உறவினர்கள் மறியல்!

மேட்டூர், மே 22-
சென்னை, ஐ.ஏ.எஸ்., பயிற்சி மையத்தில் படித்த, மேட்டூர் மாணவி, மர்மமான முறையில் இறந்தார். மரணத்துக்கு காரணமானவர்கள் மீது, நடவடிக்கை எடுக்கக்கோரி, உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

சேலம் மாவட்டம், மேட்டூர் தாலுகா, தங்கமாபுரிபட்டணத்தை சேர்ந்த கூலித்தொழிலாளி நாகராஜன். இவரது மகள் காயத்ரி, 22; பி.இ., கணினி அறிவியல் படித்தார். கடந்த ஆண்டு, சென்னையில் உள்ள, ஐ.ஏ.எஸ்., பயிற்சி மையத்தில், சேர்ந்து, விடுதியில் தங்கி, படித்து வந்தார். நேற்று, பயிற்சி மைய நிர்வாகத்தின் அவசர அழைப்பை அடுத்து, காயத்ரியின் பெற்றோர் நேற்றுமுன்தினம் அதிகாலை, சென்னை சென்றனர். அங்கு, மைய நிர்வாகிகள், ‘உங்கள் மகள் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்; அவரது உடலை பெற்றுக் கொள்ளுங்கள்’ என, கூறியுள்ளனர். மகள் எதற்காக தற்கொலை செய்தார் என்ற விபரம் தெரியாத நிலையில், உடலை, ஆம்புலன்சில் மேட்டூர் எடுத்து வந்தனர்.

தகவல் அறிந்த அவர்களது உறவினர்கள், தங்கமபுரிபட்டணத்தில் குவிந்தனர். அவர்கள், ‘உடலை பிரேத பரிசோதனை செய்யாமல் அனுப்பியுள்ளனர். அவர் எப்படி இறந்தார் என, தெரிய வேண்டும். மர்ம சாவுக்கு காரணமானவர்கள் மீது, போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதுவரை உடலை, ஆம்புலன்சில் இருந்து இறக்க மாட்டோம்‘ எனக்கூறி, மதியம், 1:00 மணிக்கு உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். போலீசார் சமாதானப்படுத்தியதையடுத்து, 3:30 மணிக்கு, அவர்கள் கலைந்தனர். இச்சம்பவத்தால், அங்கு, இரண்டு மணி நேரத்துக்கு மேல் போக்குவரத்து பாதித்தது.

பின், போலீசார் மாணவியின் சடலத்தை, பிரேத பரிசோதனைக்காக, சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். நாகராஜன் கொடுத்த புகார்படி, போலீசார் மாணவியின் மர்ம சாவு குறித்து விசாரிக்கின்றனர்.

Label