OUR CLIENTS
3 செயற்கைக்கோள்களை விண்ணில் ஏவுகிறது இஸ்ரோ!
3 செயற்கைக்கோள்களை விண்ணில் ஏவுகிறது இஸ்ரோ! Posted on 22-May-2017 3 செயற்கைக்கோள்களை விண்ணில் ஏவுகிறது இஸ்ரோ!

ஸ்ரீஹரிகோட்டா, மே 22-
இந்தியாவில் இணையதள வேகத்தை அதிகரிக்க உதவுவதற்கான மூன்று ஜிசாட் செயற்கைக்கோள்களை ஜூன் மாதம் முதல் வரிசையாக இஸ்ரோ விண்ணில் ஏவுகிறது.

இந்தியாவில் இணையதளத்தை பயன்படுத்துவோர் எண்ணிக்கை ஜூன் மாதத்திற்குள் 45 கோடியை தாண்டிவிடும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் பயன்பாட்டாளர்கள் எண்ணிக்கை உயரும் அதேவேளையில், இணையதளத்தின் வேகம் என்ற வகையில் இந்தியா மிகவும் பின் தங்கியே உள்ளது.

இந்தியாவின் இணையதள வேகம் அதிகபட்சமாக வினாடிக்கு 4.1. எம்.பி மட்டுமே. இணையதளத்தின் வேகத்தை அதிகரிக்கும் வகையில் விரைவான சமிஞ்சைகளை அனுப்புவதற்கான ஜிசாட் 19, 11 மற்றும் 20 ஆகிய மூன்று தகவல் தொடர்பு செயற்கைக் கோள்களை விண்ணில் செலுத்த இஸ்ரோ முடிவு செய்துள்ளது.

ஜிசாட் 11 செயற்கைக்கோள் வினாடிக்கு 13 ஜிகா பைட் என்ற வேகத்திலும், ஜிசாட் 20 செயற்கைக்கோள் வினாடிக்கு 70 ஜிகா பைட் வரையிலான வேகத்தில் சமிஞ்சைகளை கடத்தும் என்று இஸ்ரோ தெரிவித்துள்ளது.

Label