OUR CLIENTS
செய்தியாளர் சந்திப்பில் தே.மு.தி.க. தலைவர் ஆவேசம்!
செய்தியாளர் சந்திப்பில் தே.மு.தி.க. தலைவர் ஆவேசம்! Posted on 22-May-2017 செய்தியாளர் சந்திப்பில் தே.மு.தி.க. தலைவர் ஆவேசம்!

நெல்லை, மே 22-
நெல்லையில் செய்தியாளர் சந்திப்பின் போது முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் தற்போதைய முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியதால் தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் டென்சன் ஆனார். நெல்லையில் தே.மு.தி.க பிரமுகர் இல்ல திருமணவிழாவிற்கு விஜயகாந்த் தனது மனைவி பிரேமலதாவுடன் வருகை தந்திருந்தார்.

மணமக்களை வாழ்த்திய பிறகு செய்தியாளர்களிடம் பேசிய விஜயகாந்திடம், ஓ.பி.எஸ் & இ.பி.எஸ் அணிக்கு இடையிலான பிரச்சனை குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. ஆனால் ஓ.பி.எஸ் - இ.பி.எஸ் குறித்து தன்னிடம் பேச வேண்டாம் என்று விஜயகாந்த் ஆவேசமானார். தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்தின் அரசியல் பிரவேசம் குறித்து விஜயகாந்திடம் கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு அறிவிப்பூர்வமாக ஏதேனும் கேள்வி கேட்குமாறு விஜயகாந்த் செய்தியாளர்களை வலியுறுத்தினார்.

தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலுக்கு முன்னதாக சட்டமன்ற தேர்தல் நடைபெறும் என்று விஜயகாந்த் தெரிவித்தார். மேலும் வாக்குப்பதிவு எந்திரங்களில் தில்லுமுல்லு செய்ய முடியாது என்பது தான் தங்களின் நிலைப்பாடு என்றும் அவர் கூறினார்.

Label