OUR CLIENTS
தருமபுரியில் நடந்த அரசு விழாவை 2 அதிமுக எம்எல்ஏக்கள் புறக்கணிப்பு... செய்தியாளர் கேள்விக்கு பதில் தராமல் அமைச்சர்கள் ஓட்டம்!
தருமபுரியில் நடந்த அரசு விழாவை 2 அதிமுக எம்எல்ஏக்கள் புறக்கணிப்பு... செய்தியாளர் கேள்விக்கு பதில் தராமல் அமைச்சர்கள் ஓட்டம்! Posted on 22-May-2017 தருமபுரியில் நடந்த அரசு விழாவை 2 அதிமுக எம்எல்ஏக்கள் புறக்கணிப்பு... செய்தியாளர் கேள்விக்கு பதில் தராமல் அமைச்சர்கள் ஓட்டம்!

தர்மபுரி, மே 22-
தர்மபுரி பால்வளத்துறை சார்பில் அமைச்சர்கள் கலந்துகொண்ட அரசு விழாவில் அரூர், பாப்பிரெட்டிப்பட்டி அதிமுக எம்எல்ஏக்கள் புறக்கணித்தது குறித்து செய்தியாளர் கேட்ட கேள்விக்கு அமைச்சர்கள் பதிலளிக்க முடியாமல் ஓட்டம் பிடித்தனர்.

தருமபுரியில் ரூ.65 லட்சம் மதிப்பீட்டில் ஆவின் பாலக விரிவாக்கம், பூங்கா மற்றும் முடிவுற்ற உள்கட்டமைப்பு பணிகள் துவக்க விழா நேற்றுமுன்தினம் நடைபெற்றது. இந்த விழாவில் உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழன், பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திரபாலாஜி ஆகியோர் கலந்துகொண்டு துவக்கி வைத்தனர். முன்னதாக உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் பேசியபோது; தனியார் பால் நிறுவனங்கள் இயங்கி வந்தாலும், தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர் சங்கம் லாபகரமாக உள்ளது. தருமபுரியில் சமூக மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.65 லட்சம் நிதி ஒதுக்கீடுசெய்து பணிகள் முடிக்கப்பட்டது என தெரிவித்தார்.

இவரை தொடர்ந்து பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திரபாலாஜி பேசியபோது; தற்போது தமிழகத்தில் பத்து இடங்களில் பாலகம் அமைக்க இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த 142 ஆண்டுகளுக்கு முன்பிருந்த வறட்சி தற்போது வந்துள்ளது. மேலும் கடந்த, 2006- 2011ல் திமுக., ஆட்சியில் ரூ.109 கோடி  பால்வளத்துறை நஷ்டத்தில் இயங்கியது. அதை கண்டறிந்து தங்களது ஆட்சியில் ரூ.300 கோடிக்குமேல் லாபத்தில் உள்ளதாகவும் தெரிவித்தார்.

விழா முடிந்து அமைச்சர்கள் புறப்படும்போது செய்தியாளர்கள் அவர்களை மடக்கி  கேள்வி எழுப்பினர். அதில் அரசு விழாவில் அதிமுகவை சேர்ந்த அரூர் எம்எல்ஏ., ஆர்.ஆர்.முருகன், பாப்பிரெட்டிப்பட்டி எம்எல்ஏ.,வும், முன்னாள் அமைச்சருமான பழனியப்பன்  கலந்துகொள்ளாமல் புறக்கணித்துள்ளனர். தற்போது 13 அதிமுக எம்எல்ஏ.,க்களிடம் பழனியப்பன் ரகசியமாக ஆலோசனை நடத்தப்பட்டதாக வந்த தகவல் குறித்து கேள்வி கேட்டனர்.

அப்போது அமைச்சர்கள் இருவரும் பதிலளிக்க முடியாமல்  அரசியல் பேச்சி இங்கு வேண்டாம். இதை வர்களிடமே கேட்டுக்கொள்ளுங்கள் என  ஓட்டம்பிடித்தனர். இந்த விழாவில் தருமபுரி மாவட்ட ஆட்சியர் விவேகானந்தன் மற்றும் அரசு அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர்.

Label