OUR CLIENTS
சி.ஐ.ஏ. அமைப்புக்கு தகவல் கொடுத்த 18க்கும் மேற்பட்ட சீனர்கள் கொலை!
சி.ஐ.ஏ. அமைப்புக்கு தகவல் கொடுத்த 18க்கும் மேற்பட்ட சீனர்கள் கொலை! Posted on 22-May-2017 சி.ஐ.ஏ. அமைப்புக்கு தகவல் கொடுத்த 18க்கும் மேற்பட்ட சீனர்கள் கொலை!

வாஷிங்டன், மே 22-
சி.ஐ.ஏ உளவு அமைப்புக்கு தகவல்களை கொடுத்துவந்த 18க்கும் மேற்பட்ட சீனர்களை அந்நாட்டு அரசு கொலை செய்துள்ளதாக, அமெரிக்க முன்னாள் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

உலக நாடுகள் அனைத்தின் செயல்பாடுகளையும் தொடர்ந்து கண் காணித்து வரும் அமெரிக்கா, தனது உளவு அமைப்பின் மூலம் அந்தந்த நாடுகளைச் சேர்ந்த நபர்களை ஏஜெண்டுகளாக நியமித்து, பாதுகாப்பு மற்றும் அரசியல் ரீதியான செயல்பாடுகளை தொடர்ந்து.

உளவு பார்த்து வருகிறது. இந்நிலையில், சி.ஐ.ஏ. அமைப்புக்கு தகவல்களை கொடுத்து வந்த 18க்கும் மேற்பட்டோர் சீன அரசால் கொலை செய்யப்பட்டுள்ளதாக, அமெரிக்க முன்னாள் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த கொலைகள் கடந்த 2010 - 2012 ஆம் ஆண்டுகளில் நடைபெற்றதாக கூறியுள்ள அதிகாரிகள், சி.ஐ.ஏ. அமைப்புக்கு தகவல் கொடுத்து வந்த மேலும் சிலரை சீன அரசு சிறையில் அடைத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். இந்த நடவடிக்கையால் பல ஆண்டுகளாக கட்டமைத்து வைக்கப்பட்டிருந்த தங்களது உளவு அமைப்பு, சீனாவில் பின்னடைவை சந்தித்துள்ளதாகவும் அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Label