OUR CLIENTS
கலிபோர்னியா காட்டுப்பகுதியில் மர்ம முறையில் பற்றியெரியும் தீ!
கலிபோர்னியா காட்டுப்பகுதியில் மர்ம முறையில் பற்றியெரியும் தீ! Posted on 22-May-2017 கலிபோர்னியா காட்டுப்பகுதியில் மர்ம முறையில் பற்றியெரியும் தீ!

கலிபோர்னியா, மே 22-
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள சான்டியாகோ என்ற பகுதியில் சுமார் ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் பற்றியெரியும் தீயை அணைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

மலைப்பாங்கான காட்டுப்பகுதியில் மர்ம முறையில் தீப்பிடித்தது. இதையடுத்து, சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்புப்படையினர், ஹெலிகாப்டர் மூலம் தண்ணீர் ஊற்றி, தீயைக்கட்டுப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

சுமார் ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் தீ பற்றி எரிவதால், அந்தப் பகுதியே புகை மண்டலமாக காட்சியளிக்கிறது. இதையடுத்து, வனப்பகுதிக்கு அருகாமையில் வசிப்பவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளனர்.

Label