OUR CLIENTS
பல ஆண்டுகளாக விஞ்ஞானிகளை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ள நட்சத்திரம்!
பல ஆண்டுகளாக விஞ்ஞானிகளை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ள நட்சத்திரம்! Posted on 22-May-2017 பல ஆண்டுகளாக விஞ்ஞானிகளை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ள நட்சத்திரம்!

வாஷிங்டன், மே 22-
பல ஆண்டுகளாக விஞ்ஞானிகளை மிகவும் குழப்பத்தில் ஆழ்த்தி வைத்திருந்த பால் வீதியின் மர்மமான நட்சத்திரம் மீண்டும் மங்க தொடங்கியுள்ளது. பூமியில் இருந்து ஆயிரத்து 277 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள இந்த நட்சத்திரத்திற்கு டேப்பி என்று பெயர்.

1980ஆம் ஆண்டு கெப்ளர் விண்வெளி தொலைநோக்கி இந்த நட்சத்திரத்தைக் கண்டறிந்தது. ஆண்டுகள் செல்ல செல்ல டேப்பி நட்சத்திரமானது விஞ்ஞானிகளின் தனிக்கவனத்தை பெற்றது. இதற்கு காரணம், விஞ்ஞானிகளின் எவ்வித தோற்றத்திற்கும், கூற்றுக்கும் இடம் அளிக்காத வகையில் இந்த நட்சத்திரமானது மின்னவும், மங்கவுமாகவே இருந்தது.

நட்சத்திரத்தை மர்மப்பொருள் ஒன்று சுற்றுவதாகவும், அதில் ஏலியன்கள் இருக்கலாம் என்றும் விஞ்ஞானிகள் கூறினர். இந்நிலையில் தற்போது நட்சத்திரம் இயல்பை விட 22 சதவீதம் மங்கியுள்ளதால், விஞ்ஞானிகளின் குழப்பம் அதிகரித்துள்ளது.

Label