OUR CLIENTS
ஆறாக ஓடுது கள்ளச்சாராயம்!
ஆறாக ஓடுது கள்ளச்சாராயம்! Posted on 23-May-2017 ஆறாக ஓடுது கள்ளச்சாராயம்!

வேலூர், மே 23-
வேலூர் அடுத்துள்ள செதுவாலை, விரிஞ்சிபுரம் உள்ளிட்ட பகுதிகளில் பாலாற்றில் ஆறாக ஓடுது கள்ளச்சாராயம். களை கட்டும் கள்ளச்சாராய விற்பனை நடக்கின்றது என அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

ஆந்திர மாநில எல்லையோரத்தில் வேலூர் மாவட்டம் அமைந்திருப்பதால் கள்ளச்சாராயம், காட்டன் சூதாட்டம், ஆந்திர மாநிலம் சேஷாசலம் பகுதியில் வளர்ந்துள்ள செம்மரக்கட்டைகளை வெட்டுவது, அப்படி வெட்டிக் கொண்டு வந்த செம்மரக்கட்டைகளை கடத்தி விற்பனை செய்வது, விபச்சாரம் போன்ற  சமூக விரோதச் செயல்கள் அமோகமாக நடைபெற வாய்ப்பாக அமைந்து விடுகின்றன.

குறிப்பாகச் சொல்ல வேண்டும் என்றால் வேலூர் தாலுகா காவல் நிலையம் கணியம்பாடியில் உள்ளது. இந்த ஊரில் கடலூர்&சித்தூர் செல்லும் சாலையில் உள்ள ஒரு கட்டடத்தில் விபச்சாரம் 24 மணி நேரமும் நடக்கிறது. இதுகுறித்து மாவட்ட தனிப்பிரிவு போலீசார் சோதனை நடத்தச் சென்றால், விசுவாசமிக்க போலீசார் சிலர் விபச்சார விடுதிக்கு போன் செய்து தகவல் தெரிவித்து விட்டு ஒன்றும் தெரியாதவர்கள் போல இருந்து கொள்கிறார்கள் என்று கூறப்படுகிறது.

அப்போது அங்குள்ள அண்டர்கிரவுண்ட் பகுதியில் விபச்சார அழகிகள் மறைத்து வைக்கப்படுவார்களாம். போலீசார் சென்றவுடன் வழக்கம்போல விடுதி செயல்படுமாம். இங்கு மளிகை கடை ஒன்று உள்ளது என்றும் சொல்லப்படுகிறது. இதற்கு இணையதளத்தில் விளம்பரம் செய்து ஆள் பிடிக்கும் வேலையும் நடந்து வருகிறது. கடந்த ஒரு வாரமாக அமோகமாக நடக்கிறதாக அங்குள்ள சமூக ஆர்வலர்கள் தரப்பில் கூறப்படுகிறது.

பாலாற்றங்கரையில் கள்ளச்சாராயம் காய்ச்சி தாராளமாக விற்பனை செய்யப்படுகிறது. இதற்காக கடந்த 4 நாட்களுக்கு முன்பு சாராய வியாபாரிகள் தங்கு தடையின்றி சாராய விற்பனை செய்வதற்காக, சம்மந்தப்பட்ட அதிகாரிக்கு லகரத்தில் சரிகட்டியதாக அப்பகுதிவாழ் சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் தரப்பில் குற்றஞ்சாட்டப்படுகிறது.

டாஸ்மாக் பிரச்னைக்கு தீர்வு வருகிறதோ இல்லையோ கள்ளச்சாராய விற்பனை அமோகமாக நடைபெறுகிறது. இதுகுறித்து பலமுறை பொதுமக்கள் காவல் நிலையத்தை தொடர்பு கொண்டு புகார் கொடுத்தால் நடவடிக்கை னிணீஎடுக்கவில்லை என்று பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

செதுவாலை, விரிஞ்சிபுரம் மட்டுமல்ல வாணியம்பாடி, ஆம்பூர் பகுதியிலும் கள்ளச்சாராயம் அமோகமாக விற்பனை செய்யப்படுகிறது. அதேபோன்று ஆந்திரா பார்டர் வழியாக உள்ளிபுதூர், கல்புதூர்& வண்டறந்தாங்கல் வழியாக அதிகாலையில் அதிகமாக கள்ளச்சாரயம் கடத்தப்படுகிறது. இதுகுறித்து உடனடி நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று பொதுமக்கள் தரப்பில் கோரிக்கை வைக்கிறார்கள்.

காவல் கண்காணிப்பாளர் பகலவனை சந்தித்து பொதுமக்கள் மனு கொடுக்கும் எந்த ஒரு பிரச்னையாக இருந்தாலும் உடனடியாக சம்மந்தப்பட்ட காவல்நிலைய அதிகாரியை தொடர்பு கொண்டு பிரச்னைகளுக்கு உடனடி நடவடிக்கை எடுக்க உத்தரவிடுகிறார். நடவடிக்கை குறித்தும் தொடர் விசாரணை மேற்கொண்டு சிறப்பாக பணியாற்றி வருகிறார். அதே போன்று செதுவாலை, விரிஞ்சிபுரம் மக்களின் நலனில் அக்கரை கொண்டு சாராயம் வியாபாரத்தை அப்பகுதியில் உடனே ஒழிக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பகலவன்  உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பகலவன்  பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையிலும், டிஐஜி தமிழ்ச்சந்திரன் பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் விதத்திலும் இதுபோன்ற  சாராய வியாபாரிகளுக்கு துணை போகும் காவல் அதிகாரிகளை அடையாளம் கண்டு  உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.  விரைவில் கள்ளச்சாராய விற்பனை, விபச்சாரம் தடுத்து நிறுத்தப்பட வேண்டும் என்று பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் எதிர்பார்க்கின்றனர்.

Label