OUR CLIENTS
பார்த்திபனூரில் பூட்டியே கிடக்கும் போலீஸ் நிலையம்!
பார்த்திபனூரில் பூட்டியே கிடக்கும் போலீஸ் நிலையம்! Posted on 23-May-2017 பார்த்திபனூரில் பூட்டியே கிடக்கும் போலீஸ் நிலையம்!

பரமக்குடி, மே 23-
பரமக்குடி அருகே பார்த்திபனூர் பேருந்து நிலையத்தில் உள்ள புறக்காவல் நிலையம் செயல்படாமல் பூட்டியே கிடப்பதால், இரவு நேரங்களில் பொதுமக்கள் பாதுகாப்பு கோள்விக்குறியாக உள்ளது. பரமக்குடி அருகே பார்த்திபனூர், மதுரைராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது. பேருந்து நிலையம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தின் அருகில் உள்ளது.

பார்த்திபனூர் பேருந்து நிலையத்திற்கு தினமும் மதுரை, ராமேஸ்வரம், திருச்சி, காரைக்குடி, கமுதி, சாயல்குடி, அருப்புக்கோட்டை ஊர்களை சேர்ந்த பேருந்துகள் 100க்கும் மேற்பட்டவை வந்து செல்கின்றன.

இதனால் எப்போதும் பயணிகள் கூட்டமாக காணப்படுவார்கள். கூலிவேலை, அலுவலக பணியாளர்கள், பள்ளியிலிருந்து வீட்டிற்கு திரும்பும் மாணவர்கள் என 2 ஆயிரத்திற்கும் மேற்படடவர்கள் பேருந்து நிலையம் வந்து செல்கின்றனர். பேருந்து நிலையம் மிக சிரியதாக உள்ளதால், அடிக்கடி பயணிகளுக்குள் பிரச்னை வருவதும், சிலர் குடித்துவிட்டு பேருந்துக்கு காத்திருக்கும் பயணிகளிடம் தகராறில் ஈடுபட்டு வருவதும் தொடர்கதையாக உள்ளது.

காவல்நிலையம் கமுதி ரோட்டில் இருந்ததால், ஏதாவது பிரச்னை என்றால் தாமதமாக போலீசார் வரவேண்டியுள்ளதால், பேருந்து நிலையத்திற்கு அருகிலேயே புறக்காவல் நிலையம் அமைக்கப்பட்டது. தொடக்கத்தில் முறையாக செயல்பட்டு வந்த புறக்காவல் நிலையம், கடந்த ஓராண்டாக செயல்படாமல் பூட்டியபடியே உள்ளது. தற்போது புதிதாக கட்டப்பட்டுள்ள காவல்நிலையம், பரமக்குடி செல்லும் சாலையில் உள்ளதால், பார்த்திபனூர் ஊருக்குள் எந்தவிதமான பாதுகாப்பும் இல்லாமல் உள்ளது என்று பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

பேருந்து நிலையத்தில் எப்போதும் அதிகளவில் பொதுமக்கள் கூடுவதால் பாதுகாப்பு கேள்வி குறியாக உள்ளது. மாவட்டத்தில் புதிதாக பொறுப்பு ஏற்றுள்ள மாவட்ட கண்காணிப்பாளர் செயல்படாமல் பூட்டிய நிலையில் உள்ள புறக்காவல் நிலையத்தை திறந்து, பாதுகாப்பு பணியில் போலீசாரை ஈடுபடுத்தி, இரவு நேரங்களில் பயணிகள் மற்றும் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

Label