OUR CLIENTS
சசிகலாவுடன் எம்.எல்.ஏ.,க்கள் திடீர் சந்திப்பு ஏன்?
சசிகலாவுடன் எம்.எல்.ஏ.,க்கள் திடீர் சந்திப்பு ஏன்? Posted on 23-May-2017 சசிகலாவுடன் எம்.எல்.ஏ.,க்கள் திடீர் சந்திப்பு ஏன்?

சென்னை, மே 23-
அமைச்சர் பாலகிருஷ்ணா ரெட்டி யும், எம்.எல்.ஏ.,க்கள் சிலரும், பெங்களூரு சிறையில் சசிகலாவை சந்தித்து, முதல்வர் பழனிசாமியும், குறிப்பிட்ட சமுதாய அமைச்சர் களும் செய்யும் அடாவடி குறித்து, புகார் கூறியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சொத்துக்குவிப்பு வழக்கில், நான்கு ஆண்டு சிறை தண்டனை பெற்ற சசிகலா, பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். தேர்தல் கமிஷன் அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாக கைதான தினகரன், டில்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். இந்நிலையில், சமீபத்தில் டில்லி சென்ற, அ.தி. மு.க., - எம்.எல்.ஏ.,க்கள், வெற்றிவேல், தங்கதமிழ் செல்வன் ஆகியோர், சிறையில் தினகரனை சந்தித்து பேசினர். பின், பெங்களூரு சென்றனர்.

அதேபோல, சென்னையில் இருந்து அமைச்சர் பால கிருஷ்ணா, முன்னாள் அமைச்சர் ரமணா, நடிகர் கருணாஸ் எம்.எல்.ஏ., ஆகியோரும் பெங்க ளூரு சென்றனர். ஐந்து பேரும், சிறையில் சசிகலா வை சந்தித்து பேசி உள்ளனர். இது குறித்து, கட்சி வட்டாரங்கள் கூறியதாவது: அமைச்சரும், எம்.எல்.ஏ.,க்களும் சசிகலாவின் உடல் நலம் குறித்து விசாரித்தனர். அப்போது, சசிகலா தான் தைரியமாக இருப்பதாக கூறியுள்ளார். தினகரனுக்கு ஆதரவாக, நாஞ்சில் சம்பத், புகழேந்தி ஆகியோர் மாவட்ட வாரியாக நடத்தி வரும், பொது கூட்டங்கள் குறித்த தகவலையும் சசிகலாவிடம் கூறியுள்ளனர்.

உள்ளாட்சி தேர்தல் ரஜினியின் அரசியல் பிரவேசம், தி.மு.க., தலைவர் கருணாநிதியின் வைர விழா ஏற்பாடு குறித்தும் விவரித்துள்ளனர். மேலும், முதல்வர் பழனிசாமியும், குறிப்பிட்ட சமுதாய அமைச்சர்களும் இணைந்து, தான் தோன்றித் தனமாக செயல்படுவது குறித்தும், துறை ரீதியாக நடக்கும் முக்கிய தில்லு முல்லுகள் பற்றியும் சசிகலாவிடம் புகார் கூறியுள்ளனர்.இவ்வாறு கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

Label