OUR CLIENTS
3 புதிய செயற்கைக்கோள்கள் மூலம் அதிவேக இணையதள சேவையில் இந்தியா சகாப்தம் படைக்கும்!
3 புதிய செயற்கைக்கோள்கள் மூலம் அதிவேக இணையதள சேவையில் இந்தியா சகாப்தம் படைக்கும்! Posted on 23-May-2017 3 புதிய செயற்கைக்கோள்கள் மூலம் அதிவேக இணையதள சேவையில் இந்தியா சகாப்தம் படைக்கும்!

ஸ்ரீஹரிகோட்டா, மே 23-
சீனாவுக்கு பிறகு உலகிலேயே அதிக இணையதள பயன்பாட் டாளர் கொண்ட அமெரிக்காவை முந்தி 2-வது நாடாக இந்தியா உருவானது. ஆனால் இணைய தள வேகத்தில் இந்தியா இன்னும் பல்வேறு நாடுகளை விட பின்தங்கிய நிலையில் தான் இருக்கிறது. இந்த நிலைமை அடுத்த 18 மாதங்களில் மாறப் போகிறது. அதிவேக இணையதள சேவையை வழங்குவதற்காக 3 தொலைதொடர்பு செயற்கைக் கோள்களை விண்ணில் ஏவ இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ திட்ட மிட்டுள்ளது.

இது குறித்து இஸ்ரோ தலைவர் கிரண்குமார் கூறும்போது, ‘‘அதி வேக இணையதள சேவைக் காக 3 தொலைதொடர்பு செயற் கைக்கோள்களை விண்ணில் செலுத்தவுள்ளோம். அதன்படி வரும் ஜூன் மாதம் ஜிசாட்-19-ம் அதற்கு பிறகு வரும் மாதங்களில் ஜிசாட்-11 மற்றும் ஜிசாட்-20 செயற்கைக் கோள்கள் விண்ணில் ஏவப்படும். இதில் ஜிசாட்-19 அடுத்த தலை முறையை சேர்ந்த அதிநவீன ஜிஎஸ்எல்வி ராக்கெட் எம்கே-3 மூலம் விண்ணில் செலுத்தப்பட வுள்ளது. இந்த வகை ராக்கெட்டு கள் 4 டன் எடையுள்ள செயற் கைக்கோள்களையும் சுமந்து சென்று சுற்றுவட்டப் பாதையில் நிலைநிறுத்தக் கூடியவை. ஜிசாட்-19 செயற்கைக்கோள்களில் பன்முக பயன்பாட்டுக்கான ஸ்பாட் பீம்கள் பொருத்தப்பட்டுள்ளன.

அதன் மூலம் இணையதள வேகம் மற்றும் தொலைதொடர்பின் வேகம் கணிசமாக உயரும். இந்த செயற்கைக்கோள்கள் ஒட்டுமொத்த நாட்டுக்கும் தேவை யான அதிவேக இணையதள சேவையை வழங்கும்’’ என்றார். அகமதாபாத்தை சேர்ந்த விண்வெளி மைய இயக்குநர் தபான் மிஸ்ரா கூறும்போது, ‘‘இத்தகைய செயற்கைக் கோள்கள் பயன்பாட்டுக்கு வந்தால் அதிவேக இணையதள சேவை, தொலைபேசி மற்றும் வீடியோ சேவைகளின் தரம் அதிகரிக்கும். சாதாரண ஜிசாட் செயற்கைக் கோள்கள் நிமிடத்துக்கு ஒரு ஜிகாபைட் அளவில் இயங் கினால், ஜிசாட்-19 வகை செயற் கைக்கோள்கள் நிமிடத்துக்கு நான்கு ஜிகாபைட் அளவில் இயங்கும். 

அதாவது ஒரே செயற்கைக்கோள், நான்கு செயற்கைக்கோள்களுக்கு சமமாக பணியாற்றும். ஜிசாட்-11 மற்றும் ஜிசாட்-19 செயற்கைக்கோள்களில் தலா 8 ஸ்பாட் பீம்கள் பொருத் தப்பட்டுள்ளன. இதன் மூலம் நிமிடத்துக்கு 13 ஜிகாபைட் தகவல் களை தரவிறக்கம் செய்ய முடியும். ஜிசாட்-20 அடுத்த ஆண்டு இறுதிக் குள் விண்ணில் செலுத்தப்படும். இதன் மூலம் நிமிடத்துக்கு 60 முதல் 70 ஜிகாபைட் தகவல்களை தரவிறக்கம் செய்யலாம்’’ என்றார். இந்த செயற்கைக்கோள்கள் மூலம் இணையதள வேகத்தில் இந்தியா புதிய சகாப்தம் படைக் கும் என்றும் கூறப்படுகிறது.

Label