OUR CLIENTS
வேட்பாளரின் தேர்தல் செலவை அரசே ஏற்க தேர்தல் ஆணையம் எதிர்ப்பு!
வேட்பாளரின் தேர்தல் செலவை அரசே ஏற்க தேர்தல் ஆணையம் எதிர்ப்பு! Posted on 23-May-2017 வேட்பாளரின் தேர்தல் செலவை அரசே ஏற்க தேர்தல் ஆணையம் எதிர்ப்பு!

புதுதில்லி, மே 23-
வேட்பாளர்களின் தேர்தல் செலவை அரசே ஏற்க தேர்தல் ஆணையம் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளது.தேர்தல் நடைபெறும்போது அதற்கான செலவுகளை அரசியல் கட்சிகளும், வேட்பாளர்களும் செய்து வருகின்றனர்.

வேட்பாளர்கள் செலவுக் கணக்கை குறைத்துக் காட்டுவதாகவும், கறுப்புப்பணம் புழங்குவதாகவும் குற்றச்சாட்டுகள் எழுவதால், தேர்தல் செலவை அரசே ஏற்க வேண்டும் என்ற கருத்து வலுத்து வருகிறது. இதுதொடர்பாக பதிலளிக்கும்படி தேர்தல் ஆணையத்தை நாடாளுமன்ற நிலைக்குழு கேட்டுக் கொண்டது.

இதற்கு பதிலளித்து, தேர்தல் ஆணையம் அனுப்பியுள்ள கடிதத்தில், அரசியல் கட்சிகளின் தேர்தல் செலவை அரசே ஏற்கும் திட்டத்தை தேர்தல் ஆணையம் ஆதரிக்காது என்று கூறப்பட்டுள்ளது. வேட்பாளர்கள் செய்யும் சொந்த செலவையும், அவர்களுக்காக மற்றவர்கள் செய்யும் செலவுகளையும் தேர்தல் ஆணையம் தடுக்கவோ அல்லது தடை செய்யவோ முடியாமல் போய்விடும் என்று அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதே நேரத்தில் அரசியல் கட்சிகளுக்கு கிடைக்கும் தேர்தல் நிதி, அவர்கள் செலவு செய்யும் விதம் ஆகியவற்றில் வெளிப்படைத்தன்மையை ஏற்படுத்தும் விதமாக, தேர்தல் சீர்திருத்தம் தேவை என்றும் தேர்தல் ஆணையம் எழுதியுள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளது.

Label