OUR CLIENTS
பச்சைத் தமிழன் ரஜினியின் மராத்தி உணர்வு... உண்மையை போட்டுடைத்த நிதின் கட்காரி!
பச்சைத் தமிழன் ரஜினியின் மராத்தி உணர்வு... உண்மையை போட்டுடைத்த நிதின் கட்காரி! Posted on 23-May-2017 பச்சைத் தமிழன் ரஜினியின் மராத்தி உணர்வு... உண்மையை போட்டுடைத்த நிதின் கட்காரி!

சென்னை, மே 23-
தம்மை பச்சைத் தமிழனாக பிரகடனப்படுத்திக் கொண்ட ரஜினிகாந்த் உண்மையில் மராத்தியர் என்ற உணர்வுடன் இருப்பதாகவே மத்திய அமைச்சர் நிதின் கட்காரி உண்மையை போட்டுடைத்திருக்கிறார்.

கால்நூற்றாண்டு காலமாக அரசியலுக்கு வருவேன் வருவேன் என கூறிவந்தார் நடிகர் ரஜினிகாந்த். தற்போது தமது ரசிகர்களுடனான சந்திப்பில் அரசியல் பிரவேசம் குறித்தும் பேசியிருக்கிறார்.  இதனால் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவது உறுதியாகிவிட்டது. அதேநேரத்தில் கர்நாடகாவைச் சேர்ந்த ரஜினிகாந்த், தமிழக அரசியலில் ஈடுபடக் கூடாது என்கிற பிரசாரமும் தீவிரமாக முன்வைக்கப்பட்டு வருகிறது.

இதற்கு பதிலளித்த ரஜினிகாந்த், கடந்த 43 ஆண்டுகாலமாக தமிழகத்தில்தான் வசிக்கிறேன்; என்னை பச்சைத் தமிழனாக்கியது இந்த தமிழ் மக்கள்தான் என அதிரடியாக பேசினார். ஆனாலும் ரஜினிகாந்த் பச்சைத் தமிழனா? என்பதை முன்வைத்து விவாதங்கள் நடைபெற்று வருகின்றன.  இந்நிலையில் மத்திய அமைச்சர் நிதின் கட்காரி,  நியூஸ் சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்திருந்தார். அதில் ரஜினிகாந்த் அரசியலுக்கு வர வேண்டும்; பாஜகதான் அவருக்கு சரியான இடம் என கூறியிருக்கிறார்.   அத்துடன் ரஜினிகாந்த் ஒரு மராத்தியர்... அவர் மராத்தியர் என்பதாலேயே வீட்டில் பெரிய வீரசிவாஜி படம் வைத்திருக்கிறார் என நிலைமை தெரியாமல் உண்மையை போட்டுடைத்தார்.  இதுவும் இப்போது சர்ச்சையாகிவிட்டது.

அதாவது தம்மை பச்சைத் தமிழனாக காட்டிக் கொள்ளும் ரஜினிகாந்த், உண்மையில் உணர்வால் மராத்தியராகவே இருக்கிறார். அதைத்தான் நிதின் கட்காரி போட்டுடைத்துவிட்டார் என்கிற விமர்சனம் இப்போது சமூக வலைதளங்களில் முன்வைக்கப்படுகிறது. போர் வருவதற்குள் 'அக்கப்போர்'! என நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்... 

இந்நிலையில், அரசியல்கட்சி தலைவர்களும் ரஜினி குறித்து ஒவ்வொரு கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமானோ ரஜினிக்கு அரசியல் ஒத்துவராது. தமிழர்களை தமிழர்களே ஆண்டுகொள்கிறோம் என்றார். அதையெல்லாம் விட முகநூல், டுவிட்டர் உள்ளிட்ட இணையதளங்களில் நெட்டீசன்கள் ரஜினியின் அரசியல் வருகையை நையாண்டி செய்து வருகிறார்கள்.

இந்நிலையில் சேலம் ரஜினி ரசிகர் மன்றத்தினர் ரஜினி குறித்து விமர்சனம் சொன்னாலோ அல்லது ரஜினிக்கு எதிரான கருத்துக்களைக் கூறினாலோ அவர்கள் வீட்டு முன்பு உருவபொம்மையை எரித்து போராட்டத்தில் ஈடுபடுவோம் என கூறியுள்ளார்கள். ரஜினி, இணையத்தில் தமிழர்கள் ஏன் என்னைப் பற்றி இவ்வளவு கீழ்த்தரமாக எழுதுகிறார்கள் என கேட்டார். பின்பு அவரையே பச்சைத் தமிழன் என்று சொல்லிக்கொண்டார். ரஜினியின் கருத்துகள் முன்னுக்குப் பின் முரணாக உள்ளது என்று இப்போதே மக்கள் விமர்சிக்கத் தொடங்கிவிட்டார்கள்.

Label