OUR CLIENTS
விடுதி மாணவிகளை ஆபாசமாக திட்டும் சமையலர் கமலா!
விடுதி மாணவிகளை ஆபாசமாக திட்டும் சமையலர் கமலா! Posted on 24-May-2017 விடுதி மாணவிகளை ஆபாசமாக திட்டும் சமையலர் கமலா!

பாப்பிரெட்டிபட்டி, மே 24-
தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிபட்டி தாலுகாவில் பையர்நத்தம் கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் உள்ள அரசினர் மேல்நிலைப்பள்ளி வளாகத்திலேயே தாழ்த்தப்பட்ட மாணவிகளுக்கான விடுதி செயல்படுகிறது.

இந்த விடுதியில் 55 மாணவிகள் தங்கி கல்வி பயில்கின்றனர். இந்த மாணவியர் விடுதியில் வெளி மாவட்டத்தில் இருந்து மிகவும் வசதியில்லாத ஏழ்மை நிலையில் இருக்கும்          மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த பையர்நத்தம் மாணவியர் விடுதியில் பெற்றோர்கள் பாதுகாப்பாக நன்கு படிப்பார்கள் என்று நம்பிக்கையுடன் சேர்த்து விட்டுச் செல்கிறார்கள். இந்த பையர்நத்தம் கிராமத்தில் மாணவியர் விடுதி ஆரம்பித்து 25 ஆண்டுகள் கடந்து விட்டன. இந்த விடுதியில் எத்தனையோ வாடர்ன்களும், ஆயாக்களும் வேலை செய்தனர். இந்த விடுதியில் வார்டன் பேரிலும், ஆயா பேரிலும் மாணவிகளின் பெற்றோர்களும், மாணவியரும் எந்த ஒரு குற்றச்சாட்டும் கூறவில்லை. பொதுமக்களாலும் எந்தவித பிரச்னையும் வந்ததில்லை. அதுபோல இப்போது நான்கு மாதங்களாக பணிபுரியும் சமையல் செய்யும் ஆயா கமலா சாப்பாடு சரியாக சுத்தமாக செய்வதில்லையாம். குழம்பும் சரியாக வைப்பதில்லையாம். அவர் சமையலுக்கு உபயோகப்படுத்தும் பாத்திரங்கள் சுத்தமாக கழுவுவதில்லை. 

சாப்பாடு சரியில்லை என்று மாணவிகள் கேட்டால் கமலா மாணவிகளை வாடி போடி என்றும் தரக்குறைவான வார்த்தைகளை கூறி திட்டுவதையும் வாடிக்கையாக கொண்டுள்ளார். அத்துடன் படிக்கும் மாணவிகளை கடைகளுக்கு அனுப்புவதை வாடிக்கையாக கொண்டுள்ளார் கமலா. அத்துடன் நிறுத்தி கொள்ளாமல் மாணவிகளை பாத்திரங்களை கழுவச் சொல்லி துன்புறுத்துவது, பணிகளை செய்யாமல் இருக்கும் மாணவிகளை அருவெறுக்கத்தக்க ஆபாசமான வார்த்தைகளை பயன்படுத்தி திட்டுவதை வழக்கமாக கொண்டுள்ளார் இந்த Ôபலே கமலாÕ. இவர் நாற்காலி போட்டு உட்கார்ந்து கொண்டு மாணவிகளை சுழற்சி முறையில் சமைக்கச் சொல்லி வற்புறுத்துகிறாராம். அத்துடன் கழிவறைகளை சுத்தம் செய்ய சொல்லி மாணவிகளை டார்ச்சர் செய்து வருகிறாராம். இதை அங்குள்ள வார்டன் கண்டும் காணாமல் அமைதி காக்கிறாராம்.

இதற்கு காரணம் அனைத்திலும் மீதி செய்து பணத்தை கொள்ளையடித்து செல்கின்றனர் கூட்டு களவாணிகள். வேலை செய்யாத மாணவிகளை வசைபாடுவதோடு விடுவதில்லை. நீங்கள் சாப்பிடும் குழம்பில் உப்பை அள்ளி போட்டு விடுவேன் என்று மிரட்டி வருகிறாராம். விடுதியில் வார்டன் இருக்கும் போது மட்டும் மாணவிகளை வாங்கம்மா, போங்கம்மா என்று அழைப்பது போல நடிப்பு காட்டுவாராம் இந்த கமலா. வார்டன் போனதும் நான் சொல்வதை நீங்கள் செய்ய வேண்டும். இல்லையெனில் உங்களை ஒழித்து கட்டி விடுவேன் என்று கூறியும், இரட்டை அர்த்தங்களை கூறி திட்டுவதையும் வாடிக்கையாக கொண்டு செயல்படுகிறார். 

இத்தோடு மட்டுமன்றி வார்டன் சென்றதும் அங்குள்ள அரிசி, பருப்பு, எண்ணைய் போன்ற அத்தியாவசிய பொருட்களை சிறிது சிறிதாக பொட்டலம் கட்டி விலைக்கு விற்று லாபம் பார்த்து கொழிக்கிறார் இந்த கமலா. வாரம் ஒரு முறை மாணவிகளுக்கு வழங்கும் முட்டையை அப்படியே ஆட்டையை போட்டு விடுகிறாராம் பலே கில்லாடி கமலா. இவரது தகாத பேச்சுக்கு பயந்து மாணவிகள் வார்டனிடம் புகார் கூற முடியாமல் அமைதி காத்து வருகின்றனர். அப்படி யாராவது புகார் தெரிவித்தால் அந்த மாணவிக்கு உணவு வழங்காமல் பட்டினி போட்டு தண்டிக்கிறாராம் கமலா. சில நேரங்களில் இவருக்கு வேலை செய்யாத மாணவிகளின் சாப்பாட்டு தட்டை கூட எடுத்து மறைத்து வைத்து விடுகிறாராம் இந்த கல்மனம் படைத்த ஆயா கமலா. பல மாணவிகள் வெளியூர்களில் இருந்து வந்து இந்த விடுதியில் தங்கி  படித்து வருகின்றனர். ஆனால் கமலாவின் நடவடிக்கை அவரது ஏச்சுக்கும் பேச்சுக்கும் இசைவு தெரிவிக்காத பையர்நத்தம் கிராமத்தைச் சேர்ந்த மாணவிகள் பொறுத்தது போதும் பொங்கி எழுவோம் என்ற ரீதியில் துணிந்தனர்.

இதன் விளைவு 25 மாணவிகள் தத்தம் பெற்றோர்களிடம் கமலாவை பற்றியும் அவரது செயல்பாடு பற்றியும் விளக்கமாக எடுத்து கூறி விட்டனர். இனி நாங்கள் விடுதிக்கு செல்ல மாட்டோம், சமையல் வேலை செய்யும் ஆயா கமலா எங்களை அசிங்கமாக திட்டுகிறார் என்று கூறியுள்ளனர். குறிப்பாக 9ம் வகுப்பு படிக்கும் ராமசாமி மகள் அஸ்வினி என்ற மாணவி சாப்பாடு சரியில்லை என்று கேட்டுள்ளாராம். இதனால் 7 நாட்களாக சாப்பாட்டு தட்டை எடுத்து கமலா மறைத்து வைத்து விட்டு அந்த மாணவியை பட்டினி போட்டுள்ளார். இதனால் பொறுத்து பார்த்த மாணவி 7 நாட்களாக விடுதிக்கு சென்று தட்டு இல்லாத காரணத்தால் வீட்டுக்கு திரும்பிச் சென்ற கொடூர சம்பவம் நடந்தேறியுள்ளது. இவருக்கு அளவில்லா அதிகாரத்தை வழங்கியது யார்?. யாரது பின்புலத்தில் இவர் செயல்படுகிறார் என்பது தெரியவில்லை. இதற்கிடையே அஸ்வினி என்ற மாணவி, சமையல் செய்யும் ஆயா கமலா மீது மாவட்ட ஆட்சியர் விவேகானந்தன், மாவட்ட ஆதிதிராவிட நல அலுவலர் ஆகியோருக்கு புகார் மனு அனுப்பியுள்ளார். ஆனால் நடவடிக்கை என்பதோ ஆமை வேகத்தில் உள்ளது. இதுவரை எந்தவித நடவடிக்கையும் கமலா மீது எடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மாணவிகள் நலன் கருதி இதுபோன்ற ஆயாக்கள் மீது எடுக்கப்படும் நடவடிக்கை மாவட்டத்தில் உள்ள மற்ற ஆயாக்களுக்கு எதிரொலிக்க வேண்டும். இதற்கிடையே ஆதிதிராவிடர் நல விடுதியில் தங்கி படித்து வரும் மாணவிக்கு நேர்ந்த கொடுமையை கண்டு நெஞ்சம் பதைத்த பையர்நத்தம் கிராம மக்கள் மற்றும் அதன் சுற்றுவட்டாரங்களை சேர்ந்த பொதுமக்கள் பையர்நத்தம் கிராமத்தில் உள்ள மாணவியர் விடுதியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த ஆயத்தமாகி வருகின்றனர். மற்றொருபுறம் தங்களது பெண் பிள்ளைகளை இந்த விடுதிக்கு இனி அனுப்பமாட்டோம் என்று பெற்றோர்கள் சிலர் முடிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது. நிலைமை விபரீதமாவதற்குள்ளாக மாவட்ட ஆட்சியர் விவேகானந்தன் ஆயா கமலா மீது கடும் நடவடிக்கை எடுத்து இதுபோன்ற போராட்டங்கள் வெடிக்காமல் முற்றுப்புள்ளி வைப்பாரா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Label