OUR CLIENTS
நீ யாராக இருந்தாலும் பரவாயில்லை ரூ.200 கொடுத்து விட்டுச் செல்... கிருஷ்ணகிரி போக்குவரத்து பிரிவு போலீசாரின் எழுதப்படாத சட்டம்!
நீ யாராக இருந்தாலும் பரவாயில்லை ரூ.200 கொடுத்து விட்டுச் செல்... கிருஷ்ணகிரி போக்குவரத்து பிரிவு போலீசாரின் எழுதப்படாத சட்டம்! Posted on 24-May-2017 நீ யாராக இருந்தாலும் பரவாயில்லை ரூ.200 கொடுத்து விட்டுச் செல்... கிருஷ்ணகிரி போக்குவரத்து பிரிவு போலீசாரின் எழுதப்படாத சட்டம்!

கிருஷ்ணகிரி, மே 24-
கிருஷ்ணகிரி வேகமாக வளர்ந்து வரும் தொழில் நகரமாகும். இந்த பகுதியில் போக்குவரத்துக்கென தனியாக போலீசார் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் பணியிலேயே இருக்கின்றனர். வீட்டுக்கு கூட செல்வதில்லையாம். கடமை தவறாத போலீசாராக பணியாற்றுகின்றார்களே என்று நீங்கள் நினைத்து விடாதீர்கள். அப்படியெல்லாம் ஒன்றும் இல்லை. அந்த நேரத்தில் வசூல் வேட்டை பாதித்து விடக் கூடாது என்ற நல்லெண்ணம்தான் காரணம்.

மாவட்ட தலைநகராக விளங்கும் கிருஷ்ண கிரியில் போக்குவரத்து சிக்னலை இயக்காமல் கைகளை கொண்டு சைகை காண்பித்து போக்குவரத்தை இயக்குன்றனர் போக்குவரத்து பிரிவு போலீசார். இவர்களுடன் உள்ளூர் போலீசாரும் அடிக்கடி இணைந்து கொள்கின்றனர். இப்படி கிருஷ்ணகிரி நான்கு ரோட்டில் ரவுண்டானா அருகில் நேற்று பிற்பகல் போக்குவரத்து பிரிவில் பணியாற்றும் தலைமை காவலர் ரமேஷ் இந்த பகுதியில் பணியில் ஈடுபட்டுள்ளார்.

அதேபோன்று வசூல் வேட்டையின் உச்சத்தில் இருந்துள்ளார். அப்போது அந்த வழியாகச் சென்ற பத்திரிகையாளர்களான மனோஜ், மதன் ஆகியோரது இருசக்கர வாகனத்தை நிறுத்தியுள்ளார் தலைமை காவலர் ரமேஷ். நான் கைகளை காட்டியதை நீ ஏன் பார்க்காமல் வண்டியை இயக்கினாய் என்று கேட்டு அவரிடம் ரூ.200 கொடு என்று வழக்கம்போல பொதுமக்களிடம் கேட்பது போல கேட்டுள்ளார். இதற்கு செய்தியாளர்கள் பணமெல்லாம் தரமுடியாது, நீங்கள் ஏன் போக்குவரத்து சிக்னலை இயக்காமல் கைகளை கொண்டு சைகை காண்பித்து போக்குவரத்தை இயக்குகிறீர்கள் என்று கேட்டுள்ளனர்.

இதனால் சூடாகிப்போன காவலர், போலீசாரையே கேள்வி கேட்கிறாயா? வா என்று அருகில் உள்ள கிருஷ்ணகிரி நகர காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றுள்ளார் அந்த கடமை தவறாத கட்டிங் தலைமை காவலர் ரமேஷ். அங்கு செய்தியாளர்கள் வந்து சரமாரியாக கேள்வி கேட்டதும் கேள்விக்கு பதில் தர முடியாமல் அழைத்துச் செல்லப்பட்ட செய்தியாளர்களை அனுப்பி விட்டார்களாம். இந்த விஷயம் தொடர்பாக உரிய விசாரணை நடத்தி பொதுமக்களிடம் வசூல் வேட்டை நடத்தும் போக்குவரத்து பிரிவு தலைமை காவலர் ரமேஷ் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுப்பெற்று வருகிறது.  பணம் வசூல் செய்வதை குறிக்கோளாக கொண்டு பணியாற்றுவதை வாடிக்கையாக கொண்டுள்ளனர் கிருஷ்ணகிரி போக்குவரத்து பிரிவு போலீசார். செய்தியாளர்களிடம் ரூ.200 கொடுத்து விட்டு செல் என்று தைரியமாக கேட்கும் காவல் துறை, பொதுமக்களிடம் எப்படி நடந்து கொள்ளும் என்பதை சொல்லி தெரியவேண்டியதில்லை. 

காவல் துறை உங்கள் நண்பன் என்பது எப்படி செயல்படுகிறது என்பதை கண்கூடாக பார்க்க முடிகிறது கிருஷ்ணகிரியில். கண்களை மூடிக் கொண்டு வசூல் ஒன்றை மட்டுமே கவனிக்கிறார்கள் போலீசார். பணி முடிந்து செல்லும் போது  அருகில் உள்ள ஓட்டல்களையும், பழக்கடைகள், காய்கறி கடைகள் என்று எதையும் விட்டு விடுவதில்லை. அவர்கள் வீட்டில் உள்ளவர்களுக்கும் சேர்த்து மூட்டை கட்டிக் கொண்டுதான் செல்கின்றனர். இப்படி அவமானச் சின்னங்களாக போலீசார் செயல்படுவது அவர்கள் தலையில் அணியும் தொப்பியில் உள்ள சிங்கத்துக்கு களங்கம் ஏற்படுத்தும் விதமாக உள்ளது. காவல் துறை உயரதிகாரிகளாவது கீழ்மட்டத்தில் உள்ள காவலர்களை கடமையை ஆற்றச் சொல்லித் தாருங்கள் என்பதே இன்றைக்கு கிருஷ்ணகிரி போக்குவரத்து பிரிவு போலீசாருக்கு சொல்ல  வேண்டிய முக்கிய விஷயமாகும். இனிவரும் காலங்களில் இவர்களது செயல்பாடு எப்படி இருக்கும் என்பதைபொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Label