OUR CLIENTS
ரஜினியின் பகல் கனவு பலிக்காது... வேல்முருகன்!
ரஜினியின் பகல் கனவு பலிக்காது... வேல்முருகன்! Posted on 24-May-2017 ரஜினியின் பகல் கனவு பலிக்காது... வேல்முருகன்!

சிவகங்கை, மே 24-
‘ரஜினியின் பகல் கனவு பலிக்காது,’ என தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் தெரிவித்தார்.

அவர் சிவகங்கையில் கூறியதாவது: சமூக வலைதளங்களில் விமர்சித்த தமிழர்களை கீழ்தரமானவர்கள் என ரஜினி விமர்சித்துள்ளார். தமிழர்களால் உயர்ந்த அவருக்கு, அவர்களின் விமர்சனத்தை தாங்கி கொள்ள முடியவில்லை. அவரது பேச்சை திரும்ப பெற வேண்டும். ஈழத்தமிழர் படுகொலை, டில்லியில் விவசாயிகள் போராட்டம், காவிரி பிரச்னையில் தமிழர்கள் தாக்கப்பட்டது, நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு என அனைத்திலும் வாய்மூடி மவுனியாக இருந்தவர் ரஜினி.

அவரது பகல் கனவு பலிக்காது. திரைப்படத்துறையினர் தமிழகத்தை ஆள்வது மாற வேண்டும். தமிழர் விரோத அரசாக, மத்திய அரசு உள்ளது. இதனை கண்டித்து மே 31 திருச்சியில் மத்திய அரசு அலுவலகத்தை முற்றுகையிட உள்ளோம். மதுக்கடைக்கு எதிராக போராடியோர் மீது போடப்பட்ட வழக்கை தமிழக அரசு திரும்ப பெற வேண்டும், என்றார்.

Label