OUR CLIENTS
மீன்வள மேற்பார்வையாளர் பணி விண்ணப்பம்!
மீன்வள மேற்பார்வையாளர் பணி விண்ணப்பம்! Posted on 24-May-2017 மீன்வள மேற்பார்வையாளர் பணி விண்ணப்பம்!

ஈரோடு, மே 24-
தமிழ்நாடு மீன்வளத் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் பவானிசாகர் மீன்துறை உதவி இயக்குநர் அலுவலகத்தில் காலியாகவுள்ள ஒரு மீன்வள மேற்பார்வையாளர் தரம் II பணியிடத்திற்கு தகுதியுள்ள நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

1. பணியின் பெயர்:  மீன்வள மேற்பார்வையாளர் தரம் II

2. காலியிடம் :  ஒன்று 

3. ஊதிய விகிதம்  :  ரூ. 5200- 20200+தரஊதியம் ரூ. 2000

4. இனச் சுழற்சி அடிப்படையில் பிரிவு:  ஆதிதிராவிடர் (முன்னுரிமை அடிப்படையில் அருந்ததியினர்)

5. வயது வரம்பு : 18 வயது முதல 35 வயது வரை.

6. கல்வித்தகுதி : எஸ்.எஸ்.எல்.சி. தேர்ச்சி பெற்றிருக் வேண்டும்.

7. இதர இன்றியமையா தகுதி  : 1)  நீச்சல் தெரிந்திருக்க வேண்டும், 2)  மீன்பிடிக்க தெரிந்திருக்க வேண்டும், 3)  மீன்பிடிவலைகள் மற்றும் அறுந்த வலைகளை பழுது நீக்க தெரிந்திருக்க வேண்டும்.

8. முன்னுரிமை தகுதி  : மீன்துறையின் கீழுள்ள ஏதேனும் ஒரு மீனவர் பயிற்சி நிலையத்தில் பயிற்சி மேற்கொண்டமைக்கான சான்றிதழ் பெற்றவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதி வாய்ந்த நபர்கள் தங்களது பெயர், தந்தை / கணவர் பெயர், பாலினம், பிறந்த தேதி, தற்காலிக மற்றும் நிரந்தர முகவரி, கல்வித்தகுதி, சிறப்பு தகுதி, சாதி, சாதியில் முன்னுரிமை விபரம், வேலைவாய்ப்பு அட்டை பதிவு விபரம், ஆதார் அட்டை / குடும்ப அட்டை விபரம் மற்றும் அனுபவ விவரம் போன்ற விபரங்களை ஒரு வெள்ளைத்தாளில் பதிவு செய்து மேற்கண்ட பதிவுகளை உறுதிப்படுத்தும் வகையில் உரிய ஆவணங்களின் ஒளி நகல்களையும், 2 பாஸ்போர்ட் அளவு வண்ண புகைப்படங்களையும் இணைத்து மீன்வள உதவி இயக்குநர், மீன்வள உதவி இயக்குநர் அலுவலகம், டேம் ரோடு, புங்கார், பவானிசாகர்&638451, ஈரோடு மாவட்டம் என்ற முகவரிக்கு  12.06.2017&ம் தேதி மாலை 5.45 மணிக்குள் விண்ணப்பம் கிடைக்கும் வகையில் பதிவு அஞ்சல் வாயிலாக விண்ணப்பிக்கலாம்.  உரிய காலத்திற்கு மேல் பெறப்படும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.

Label