OUR CLIENTS
‘ஆட்சி கவிழும் என்ற அச்சமே காரணம்!’
‘ஆட்சி கவிழும் என்ற அச்சமே காரணம்!’ Posted on 24-May-2017 ‘ஆட்சி கவிழும் என்ற அச்சமே காரணம்!’

சென்னை, மே 24-
‘’பெரும்பான்மையை நிரூபிக்க முடியாமல் போய் விடுமோ என்ற அச்சம் காரணமாகத் தான், சட்டசபையை கூட்டத் தயங்குகின்றனர்,’’ என, தி.மு.க., செயல் தலைவர், ஸ்டாலின் கூறினார்.

அவரது பேட்டி: ஜூன், 3ல், கருணாநிதியின், 60 ஆண்டு கால சட்டசபை பணி வைர விழா மற்றும், 94வது பிறந்த நாள் விழா, சென்னையில் நடக்கிறது. காங்கிரஸ் துணைத் தலைவர், ராகுல்; பீஹார் முதல்வர், நிதிஷ் குமார்; மார்க்சிஸ்ட் பொதுச் செயலர், சீதாராம் யெச்சூரி; தேசிய மாநாட்டு கட்சி தலைவர், பரூக் அப்துல்லா; ராஷ்ட்ரீய ஜனதா தள தலைவர், லாலு பிரசாத் யாதவ்; இந்திய கம்யூனிஸ்ட் செயலர், டி.ராஜா; தேசியவாத காங்., தலைவர், சரத் பவார் உள்ளிட்டோர், கருணாநிதியை வாழ்த்தி பேசுகின்றனர்.

இந்த விழாவில், கருணாநிதி பங்கேற்கும் வாய்ப்பு இல்லை. டாக்டர்கள் அனுமதித்தால், அவர் பங்கேற்கும் வாய்ப்பு ஏற்படும். ஜனாதிபதி தேர்தலில், பொது வேட்பாளரை அறிவிப்பது தொடர்பாக, சோனியா என்னிடம் தொலைபேசியில் பேசிஇருக்கிறார். அனைவரும் கலந்து பேசி முடிவெடுத்த பின், வேட்பாளர் குறித்து முடிவெடுக்கப்படும்.

தமிழக சட்டசபையை கூட்டுவது தொடர்பாக, நாங்கள் முறையாக கடிதம் கொடுத்திருக்கிறோம். சட்டசபையை கூட்ட வேண்டும் என, அறிக்கை வெளியிட்டு இருக்கிறோம்; ஆனாலும், எந்த பதிலும் வரவில்லை.பெரும்பான்மையை நிரூபிக்க முடியாமல் போய் விடுமோ என்ற அச்சம் காரணமாகத் தான், சட்டசபையை கூட்டத் தயங்குகின்றனர். இவ்வாறு ஸ்டாலின் கூறினார்.

Label