OUR CLIENTS
பயிற்றுநர் பணிக்கு விண்ணப்பிக்க அழைப்பு!
பயிற்றுநர் பணிக்கு விண்ணப்பிக்க அழைப்பு! Posted on 24-May-2017 பயிற்றுநர் பணிக்கு விண்ணப்பிக்க அழைப்பு!

கடலூர், மே 24-
தொழிற் பயிற்சி நிலையத்தில் மின்கம்பியாள் தொழிற்பிரிவுக்கு பயிற்றுநர் பணிக்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: சிதம்பரம் சுவாமி சகஜானந்தா அரசினர் தொழிற் பயிற்சி நிலையத்தில் காலியாக உள்ள மின்கம்பியாள் தொழிற் பிரிவுக்கு பயிற்றுநர் பணியிடம் ஒன்று நிரப்பப்பட உள்ளது. இந்த பணியிடத்தை பூர்த்தி செய்திட புதிய சுழற்சி முறை அரசாணைப்படி இன சுழற்சி அடிப்படையில் பூர்த்தி செய்யப்பட உள்ளது.

இப்பதவிக்கான தொகுப்பூதியம் ரூ..10,000- ஆகும். கம்பியாள் பயிற்றுநர் பணியிடம் பொது முன்னுரிமை அடிப்படையில் பூர்த்தி செய்யப்படும். வயது வரம்பு அரசு நிர்ணயித்தபடி.

கல்வித்தகுதி தேசிய தொழிற் சான்று கம்பியாள் பிரிவு கல்வித்தகுதிக்கு 3 வருட முன் அனுபவமும், தேசிய தொழிற் பழகுநர், கம்பியாள் பிரிவு கல்வித்தகுதிக்கு 2 வருடம் முன் அனுபவ சான்றிதழ்களுடன் தங்களது கல்வித்தகுதி முன்னுரிமை குறித்த சான்றுகள் ( 1. கலப்பு திருமணம், 2. மாற்றுத் திறனாளி 3. முன்னாள் ராணுவத்தினர் 4. விதவை ) ஆகிய விபரங்களுடன் முதல்வர், சுவாமி சகஜானந்தா அரசினர் தொழிற் பயிற்சி நிலையம் சீர்காழி மெயின்ரோடு, சிதம்பரம் என்ற முகவரிக்கு 09.06.2017ம் தேதிக்குள் விண்ணப்பங்கள் அனுப்பி வைக்க வேண்டும். இவ்வாறு அந்தத செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுளளது.

Label