OUR CLIENTS
நோய் நிவாரண மாத்திரைகள் தொடர்பில் வெளியான அதிர்ச்சி தகவல்!
நோய் நிவாரண மாத்திரைகள் தொடர்பில் வெளியான அதிர்ச்சி தகவல்! Posted on 24-May-2017 நோய் நிவாரண மாத்திரைகள் தொடர்பில் வெளியான அதிர்ச்சி தகவல்!

வாஷிங்டன், மே 24-
உலகின் பல்வேறு நாடுகளிலும் வெவ்வேறு நோய்களுக்கான மாத்திரைகள் கண்டுபிடிக்கப்பட்டு உருவாக்கப்படுகின்றன.

எனினும் இவற்றினை பயன்பாட்டிற்கு விடுவதற்கு முன்னர் உணவு மற்றும் மாத்திரை நிர்வாகத்திடமிருந்து (திஞிகி) அனுமதி பெற வேண்டும். இந்த நிர்வாகமானது அமெரிக்காவில் காணப்படுகின்றது. இந்த நிர்வாகத்தினால் வழங்கப்படும் அனுமதியிலும் குறைபாடுகள் காணப்படுவதாக தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதன்படி அனுமதி வழங்கப்படும் மூன்றில் ஒரு மாத்திரைகள் மனிதர்களுக்கு பாதுகாப்பு சிக்கலை ஏற்படுத்துவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் திஞிகி ஆனது மாத்திரைகளுக்கான அனுமதியை வழங்குவதுடன் நின்றுவிடாது தொடர்ச்சியாக அதன் பாவனை தொடர்பிலும் அவதானம் செலுத்தி வருகின்றது.

இதனால் பெரிய பாதிப்புக்கள் ஏற்படுவதை தடுத்து நிறுத்த முடியும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. எவ்வாறெனினும் 2001ம் ஆண்டு தொடக்கம் 2010ம் ஆண்டு வரை அனுமதி வழங்கப்பட்ட மாத்திரைகளுள் 32 சதவீதமானவை பாதுகாப்பு அச்சுறுத்தலைக் கொண்டிருந்தமை கண்டறியப்பட்டுள்ளது.

Label