OUR CLIENTS
சர்வதேச பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாகும் வடகொரியா ஐ.நா செய்தி தொடர்பாளர் கண்டனம்!
சர்வதேச பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாகும் வடகொரியா ஐ.நா செய்தி தொடர்பாளர் கண்டனம்! Posted on 24-May-2017 சர்வதேச பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாகும் வடகொரியா ஐ.நா செய்தி தொடர்பாளர் கண்டனம்!

கலிபோர்னியா, மே 24-
உலக நாடுகளின் கண்டனங்களை பொருட்படுத்தாமல் வடகொரியா தொடர்ந்து ஏவுகணைகளை பரிசோதித்து வரும் நிலையில், இது பிராந்திய மற்றும் சர்வதேச பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் என ஐ.நா சபையின் செய்தி தொடர்பாளார் தெரிவித்துள்ளார்.

ஐ.நா மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகளின் எதிர்ப்புகளையும் மீறி வடகொரியா தொடர்ச்சியாக பல்வேறு கட்ட ஏவுகணை சோதனைகளை மேற்கொண்டு வருகின்றது.

அந்த வகையில் நேற்று முன்தினம் நடத்திய ஏவுகணை சோதணையில் வெற்றியும் பெற்ற நிலையில் அமெரிக்கா, ஐ.நா., ஐரோப்பிய யூனியன் உள்ளிட்டவை வடகொரியா மீது பொருளாதார தடைகளை விதிக்கும் முயற்சியில் தொடர்ந்து வருகின்றன.

வடகொரியாவால், தெற்கு பியாங்கன் மாகாணத்தில் உள்ள புக்சங் பகுதியிலிருந்து ஏவப்பட்ட இந்த ஏவுகணை 500 கிலோமீட்டர் தூரம் வரை பாய்ந்து, தங்கள் நாட்டில் கிழக்கு பகுதியில் உள்ள கடலில் விழுந்ததாக தென்கொரியா பாதுகாப்பு துறை அதிகாரிகள் கூறியுள்ளனர்.

வடகொரியாவின் இந்த நடவடிகைக்கு ஐ.நா சபையின் செய்தி தொடர்பாளர் ஸ்டீபன் டுஜாரிக் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும், “ வடகொரியாவின் தொடர் ஏவுகணை சோதனைகள் பிராந்திய மற்றும் சர்வதேச பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக உள்ளது” எனவும் தெரிவித்துள்ளார்.

கடந்த வாரம் வடகொரியாவின் நடவடிக்கைக்கு ஐ.நா. பாதுகாப்பு சபை, அந்நாட்டின் மீது வலுவான தடை கொண்டு வருவதற்கான முயற்சிகளை எடுத்து வந்தது குறிப்பிடத்தக்கது.

Label