OUR CLIENTS
34 வருடங்களாக தொடர்ந்து லாவாவை வெளியேற்றும் கிலாயூவா!
34 வருடங்களாக தொடர்ந்து லாவாவை வெளியேற்றும் கிலாயூவா! Posted on 24-May-2017 34 வருடங்களாக தொடர்ந்து லாவாவை வெளியேற்றும் கிலாயூவா!

ஹவாய், மே 24-
உலகில் உயிர்ப்புடன் இருக்கும் எரிமலைகளில் ஹவாய் தீவுகளில் உள்ள கிலாயூவா ((Kilauea)) எரிமலையும் ஒன்று.

இந்த எரிமலையில் இருந்து லாவா எனப்படும் எரிமலைக் குழம்பு அலை அலையாக வெளியேறிப் பரவும் காட்சிகள் ((time-lapse)) டைம் லேப்ஸ் முறையிலான வீடியோவாக பதிவு செய்யப்பட்டுள்ளது. மலை முகட்டில் இருந்து வழிந்து வெளியேறும் எரிமலைக் குழம்பு நான்கு கிலோமீட்டர் வரை பரவி ஆரஞ்சு-மஞ்சள் நிறத்தில் காட்சி தருகிறது.

கடந்த 34 வருடங்களாக தொடர்ந்து லாவாவை வெளியேற்றும் கிலாயூவா ((Kilauea)) எரிமலை, ஹவாயின் தென் பகுதியில் அமைந்துள்ளது. தற்போது வெளியேறி வரும் இந்த லாவா எரிமலைக் குழம்பு ஆபத்தை விளைவிக்காது என்று அமெரிக்க புவியியல் ஆய்வு தெரிவித்துள்ளதால், அருகில் வாழும் மக்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.

Label