OUR CLIENTS
சுதந்திர தினத்தில் ரஜினி கட்சி... நடிகைகள் மீனா, நமீதா ஆதரவு!
சுதந்திர தினத்தில் ரஜினி கட்சி... நடிகைகள் மீனா, நமீதா ஆதரவு! Posted on 25-May-2017 சுதந்திர தினத்தில் ரஜினி கட்சி... நடிகைகள் மீனா, நமீதா ஆதரவு!

சென்னை, மே 25-
சுதந்திர தினத்தன்று, புது கட்சி அறிவிப்பை வெளியிட, நடிகர் ரஜினி திட்டமிட்டுள்ளார். கட்சிக் கொடியை, இரு தினங்களுக்கு முன் வடிவமைத்துள்ளார். ரஜினி கட்சியில் சேர, நடிகைகள் மீனா, நமீதா முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது.

சென்னை, கோடம்பாக்கத்தில் உள்ள, ராகவேந்திரா திருமண மண்டபத்தில், ரஜினி, சமீபத்தில், தன் ரசிகர் களை சந்தித்தார். அப்போது, ‘அரசியலில் மாற்றத்தை உருவாக்கும் போருக்கு, ரசிகர்கள் தயாராக இருக்க வேண்டும்‘ என, அழைப்பு விடுத்தார். இரு தினங்களுக்கு முன், வெளிநாடு சென்று உள்ள தொழிலதிபர் ஒருவரிடம், ரஜினி தொலைபேசியில் பேசியுள்ளார்.

அப்போது, தன் கட்சிக் கொடியையும், அதில் இடம்பெறும், ‘லோகோ’வையும் தெரிவித்துள்ளார். ஆக., 15ல், சுதந்திர தினத்தன்று, புதிய கட்சியின் அறிவிப்பை, அவர் வெளியிடத் திட்டமிட்டுள்ளார். இதுகுறித்து, தனக்கு நெருக்கமான பத்திரிகை ஆசிரியரிடமும், ஆலோசனை நடத்தியுள்ளார். இதற்கிடையில், நடிகர், நடிகையரும், ரஜினியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு, வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

அவர்களில், நடிகைகள் மீனாவும், நமீதாவும், ரஜினி கட்சியில் சேர தயாராக இருப்பதாகத் தெரியவந்துள்ளது. மேலும், ரஜினி கட்சி துவங்கினால், அதில் இணைவதற்கு, அ.தி.மு.க., முக்கிய புள்ளிகளும், தூது விடுவதாக தகவல் வெளியாகி உள்ளது. தி.மு.க., காங்கிரஸ், த.மா.கா.,வை சேர்ந்த மாநில, மாவட்ட நிர்வாகிகளும், ரஜினி கட்சிக்கு தாவலாம் என, கூறப்படுகிறது.

Label