OUR CLIENTS
திண்டுக்கல்லில் ‘செறிவூட்டும் கிணறுகள்’!
திண்டுக்கல்லில் ‘செறிவூட்டும் கிணறுகள்’! Posted on 25-May-2017 திண்டுக்கல்லில் ‘செறிவூட்டும் கிணறுகள்’!

திண்டுக்கல், மே 25-
திண்டுக்கல்லில் குடிநீர் பஞ்சம் தீர்க்கும் நீராதாரங்களை பெருக்க ‘வட்டக் கிணறு செறிவூட்டல் திட்டம்‘ துவங்கப்பட்டுள்ளது.

திண்டுக்கல் மாவட்டத்தில் ஊராட்சிகளின் கட்டுப்பாட்டில் 1,557 குளங்கள் உள்ளன. பொதுப் பணித்துறையின் கட்டுப்பாட்டில் 199 குளங்கள் பராமரிக்கப்படுகின்றன. தற்போது தனியார் நிறுவனங்கள், பொதுநல அமைப்புகள், தன்னார்வலர்கள் பங்களிப்புடன் திண்டுக்கல் மாவட்டத்தின் சிறுமலை அடிவாரம் முதல் குடகனாறு வரை உள்ள வரத்து வாய்க்கால்கள், குளங்கள் தூர்வாரப்படுகின்றன. நேற்று அடியனூத்து ஊராட்சியில் நீராதாரத்தை பெருக்க ‘வட்டக்கிணறு செறிவூட்டல் திட்டம்‘ அறிமுகப்படுத்தப்பட்டது.

அந்தப் பணிகளை ஆய்வு செய்த கலெக்டர் டி.ஜி.வினய் கூறியதாவது: மாநிலத்திலேயே முதன் முறையாக ‘வட்டக்கிணறு செறிவூட்டல் திட்டம்‘ திண்டுக்கல் மாவட்டத்தில் துவங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் நீராதார செறிவூட்டலில் திண்டுக்கல் முன்மாதிரி மாவட்டமாக திகழ்கிறது.

குளங்களின் வரத்து வாய்க்கால்களில் 5க்கு 5அடி என்ற வீதத்தில் குழி தோண்ட வேண்டும். அதில், 5 டன் எடையில் ‘சிமென்ட்’டால் வடிவமைக்கப்பட்ட ‘ரிங் சிலாப்’ 5 அடி உயரத்திற்கு அடுக்க வேண்டும். பின், வரத்து வாய்க்காலில் வட்டக் கிணறின் மூடி மட்டும் தெரியும் படி மண்ணால் மூடிவிட வேண்டும்.

இந்த செறிவூட்டல் கிணறு திட்டம் மூலம் பெறும் பயன்கள் ஏராளம். மழைநீர் மூலம் நிரம்பும் குளங்களில் மறுகால் பாயும். அப்போது கால்வாய்களில் செல்லும் மழைநீர் மூடியில் உள்ள துளைகளின் வழியாக வட்டக்கிணற்றுக்குள் புகுந்து, உள்ளே உள்ள ‘ரிங் சிலாப்’களில் உள்ள துளைகள் மூலம் வெளியேறி பூமிக்கடியில் நீர் செறிவூட்டல் நடைபெறும். இதனால் நீர்த்தாங்கிகள் செறிவூட்டப்பட்டு, கோடை காலத்திலும் நீராதாரம் பாதிக்கப்படாது.

மேலும் ‘அதிகபட்ச வறட்சிப்பகுதி’ (ரெட் ஜோன்) என, மாவட்டத்தில் பல கிராமப் பகுதிகளை கண்டறிந்துள்ளோம். அந்த பகுதிகளில், ‘தமிழ்நாடு குக்கிராமங்கள் மேம்பாட்டுத் திட்டம்‘ மூலம் ரூ.1.12 கோடியில் 938 வட்டக்கிணறுகள் (ரிங்வெல்ஸ்) தலா ரூ.12 ஆயிரம் செலவில் அமைக்கப்படும் பணி நடக்கிறது. இந்த பணிகள் நிறைவடைந்தால் கிராமப் பகுதிகளில் குடிநீர் பஞ்சம் இருக்காது, என்றார்.

Label