OUR CLIENTS
பிரதமரை சந்திக்க முதல்வருடன் சென்றது யார்? மைத்ரேயன் கேள்வி...
பிரதமரை சந்திக்க முதல்வருடன் சென்றது யார்? மைத்ரேயன் கேள்வி... Posted on 25-May-2017 பிரதமரை சந்திக்க முதல்வருடன் சென்றது யார்? மைத்ரேயன் கேள்வி...

சென்னை, மே 25-
பிரதமர் மோடியை முதல்வர் சந்திக்க சென்ற போது அவருடன் சென்றது யார் என ராஜ்யசபா எம்.பி., மைத்ரேயன் கேள்வி எழுப்பினார்.

சென்னையில் முன்னாள் முதல்வர் பன்னீர் செல்வம் தனது ஆதரவு எம்.பி., மற்றும் எம்.எல்.ஏ.,க்களுடன் ஆலோசனை நடத்தினார். இதில் ஜனாதிபதி தேர்தல், இரட்டை இலை சின்னம் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டிருக்கலாம் என தெரிகிறது.

இந்த ஆலோசனை தொடர்பாக ராஜ்யசபா எம்.பி., மைத்ரேயன் கூறியதாவது: பிரதமரை சந்தித்த போது வலியுறுத்திய கோரிக்கைகள் தொடர்பாக ஆலோசனை நடத்தினோம். நேற்று ஆலோசனை நடத்தியது தொடர்பாக விரிவான அறிக்கை வெளியிடப்படும். ஜனாதிபதி தேர்தல் அறிவித்த பின்னர், ஓ.பி.எஸ்., ஆலோசனை நடத்தி முடிவை தெரிவிப்பார்.

உள்ளாட்சி தேர்தலை நடத்த முதல்வர் பழனிசாமிக்கு தைரியம் இல்லை. ஓ.பி.எஸ்., பிரதமரை சந்தித்த போது, நிர்வாகிகளை உடன் அழைத்து சென்றார். பிரதமரை சந்தித்த போது முதல்வருடன் சென்றது யார்? இவ்வாறு அவர் கூறினார்.

Label