OUR CLIENTS
பாகிஸ்தானில் இந்து மதத்தைச் சேர்ந்த டாக்டர் சுட்டுக்கொலை
பாகிஸ்தானில் இந்து மதத்தைச் சேர்ந்த டாக்டர் சுட்டுக்கொலை Posted on 06-Aug-2016 பாகிஸ்தானில் இந்து மதத்தைச் சேர்ந்த டாக்டர் சுட்டுக்கொலை

கராச்சி:
பாகிஸ்தான் நாட்டில் சிறுபான்மையினர் மீதான தாக்குதல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த வாரம் 32 வயது  இளம் மருத்துவர் கராச்சியில் உள்ள மருத்துவமனை ஒன்றில் பிணமாக கண்டெடுக்கப்பட்டார்.


அந்த சம்பவத்தின் பரபரப்பு அடங்குவதற்குள் மற்றுமொரு கொலை அப்பகுதியில் நடந்துள்ளது. இந்து மதத்தைச் சேர்ந்த மருத்துவர் பிரிதம் லக்வானி(56) கராச்சி பகுதியில் கிளினிக் ஒன்றை நடத்தி வந்தார்.

இந்நிலையில் கடந்த வியாழக்கிழமை இரவு கிளினிக்கில் பிரிதம் பிணமாக கண்டெடுக்கப்பட்டிருக்கிறார். இதுகுறித்து போலீஸ் தரப்பில் 'கடந்த வியாழக்கிழமை இரவு 11 மணியளவில் தன்னுடைய கிளினிக்கில் அமர்ந்திருந்த பிரிதம் லக்வானியை அடையாளம் தெரியாத நபர் ஒருவர் சுட்டுக் கொன்றிருக்கிறார்.

இதற்கான காரணம் என்னவென்பதை விசாரித்து வருகிறோம்' என தெரிவித்துள்ளனர்.

Label