OUR CLIENTS
சியாச்சின் அருகே பாகிஸ்தான் விமானப்படையினர் திடீர் ரோந்து... காஷ்மீர் எல்லைப் பகுதியில் போர் பதற்றம்!
சியாச்சின் அருகே பாகிஸ்தான் விமானப்படையினர் திடீர் ரோந்து... காஷ்மீர் எல்லைப் பகுதியில் போர் பதற்றம்! Posted on 25-May-2017 சியாச்சின் அருகே பாகிஸ்தான் விமானப்படையினர் திடீர் ரோந்து... காஷ்மீர் எல்லைப் பகுதியில் போர் பதற்றம்!

சியாச்சின், மே 25-
காஷ்மீர் மாநிலம் சியாச்சின் அருகே பாகிஸ்தான் விமானப்படையினர் திடீர் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளதால் எல்லையில் போர் பதற்றம் உருவாகியுள்ளது.

எல்லைக்கு அப்பால் இருந்து அடிக்கடி அத்துமீறி தாக்குதல் நடத்திவரும் பாகிஸ்தான் ராணுவம், தீவிரவாதிகள் இந்திய எல்லையில் ஊடுருவ உதவி செய்வதாக குற்றம்சாட்டப்படுகிறது. இதையடுத்து எல்லை கட்டுப்பாட்டு கோடு அருகே பாகிஸ்தான் ராணுவ நிலைகளை இந்திய ராணுவத்தினர் தாக்கி அழித்த வீடியோ காட்சிகள் நேற்று முன்தினம் வெளியானது. இந்நிலையில் காஷமீர் மாநிலம் சியாச்சின் எல்லையில் பாகிஸ்தான் விமானப்படை விமானங்கள் திடீர் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றன.

மேலும் இந்திய எல்லை அருகே பாகிஸ்தான் ராணுவ வீரர்களும் போர் விமானங்கள், ராணுவ டேங்குகளை தயார்ப்படுத்தும் வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன. சர்வதேச எல்லை கட்டுப்பாட்டு கோடு பகுதியில் பாகிஸ்தான் ராணுவ வீரர்களும் தயார் நிலையில் உள்ளதாக கூறப்படுகிறது. இதனிடையே சியாச்சின் பகுதிக்கு பாகிஸ்தான் ராணு தளபதி விரைந்துள்ளதாக கூறப்படுவதால் எல்லையில் போர் பதற்றம் உருவாகியுள்ளது. பாகிஸ்தான் படைகளின் நடவடிக்கையை அடுத்து இந்திய ராணுவமும் உஷார்ப்படுத்தப்பட்டு உள்ள நிலையில் சியாச்சின் பகுதிக்குள் பாகிஸ்தான் விமானங்கள் எதுவும் பறக்கவில்லை என இந்திய விமானப்படை மறுத்துள்ளது.

Label