OUR CLIENTS
ஒலிம்பிக் குத்துச்சண்டை: கடினமான பிரிவில் இந்திய வீரர்கள்
ஒலிம்பிக் குத்துச்சண்டை: கடினமான பிரிவில் இந்திய வீரர்கள் Posted on 06-Aug-2016 ஒலிம்பிக் குத்துச்சண்டை: கடினமான பிரிவில் இந்திய வீரர்கள்

ரியோ ஒலிம்பிக்கில் இந்திய குத்துச்சண்டை அணியில் ஷிவ தபா (56 கிலோ), மனோஜ்குமார் (64 கிலோ), விகாஸ் கிருஷ்ணன் (75 கிலோ) ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். இவர்கள் ‘பை’ வாய்ப்பு மூலம் நேரடியாக 2-வது சுற்றில் விளையாட இருந்தாலும் போட்டி அட்டவணை கடினமாக அமைந்துள்ளது.

22 வயதான ஷிவ தபா, தனது முதல் ஆட்டத்தில் லண்டன் ஒலிம்பிக்கில் தங்கப்பதக்கம் வென்றவரான கியூபா வீரர் ரோபிஸி ரமிரேசுடன் (ஆக.9-ந்தேதி) பலப்பரீட்சை நடத்துகிறார். ஆசிய விளையாட்டு சாம்பியனான விகாஸ் கிருஷ்ணன், 18 வயதான அமெரிக்காவின் சார்லஸ் கான்வெல்லை (ஆக.10) எதிர்கொள்கிறார். மனோஜ்குமார் தனது சவாலை, லிதுவேனியா வீரர் எவல்டாஸ் பெட்ராவ்ஸ்காசுடன் (ஆக.10) தொடங்குகிறார்.

Label