OUR CLIENTS
மறந்துபோன மாநகராட்சி நிர்வாகம்... துர்நாற்றம் வீசுவதால் மக்கள் அவதி!
மறந்துபோன மாநகராட்சி நிர்வாகம்... துர்நாற்றம் வீசுவதால் மக்கள் அவதி! Posted on 25-May-2017 மறந்துபோன மாநகராட்சி நிர்வாகம்... துர்நாற்றம் வீசுவதால் மக்கள் அவதி!

வேலூர், மே 25-
அசுத்தம், துர்நாற்றம், குப்பை, சிறுநீர் என வேலூர் பகுதி மக்களை மிகவும் முகம்சுளிக்கச் வைக்கும் இடமாக லாங்கு பஜார் பகுதி கடந்த காலங்களில் மாறியுள்ளது.

இதற்கு முழு பொறுப்பு மாநகராட்சி ஆணையர் குமார் என்று சொன்னால் அது மிகையாகாது. மாநகரில் என்னென்ன குறைகள் உள்ளது என்று நகர்வலம் வந்து சரி செய்து தரும் எண்ணமே அவருக்கு இல்லை. அவர் குளிரூட்டப்பட்ட அறையை விட்டு வெளியில் வரவே மிகவும் சிரமப்படுவதோடு சலித்தும் கொள்கிறார். இப்படிப்பட்டவர்கள் மாநகரை எப்படி கட்டிக்காப்பார்கள். சுகாதாரமின்மையால் தொற்று நோய்கள் பரவும் பகுதியாக இந்த லாங்கு பஜார் திருப்பம் மாறியுள்ளது.

குறிப்பாக பெண்கள் இந்த வழியாக நடந்து செல்ல முடியாத இடமாக திகழ்கிறது. இந்த புகழ் முழுவதும் மாநகராட்சியின் மெத்தனப் போக்குக்கு ஒரு சிறந்த எடுத்துக் காட்டாகும். அதையும் மீறி இந்தப்பக்கம் செல்வோர் யாராக இருந்தாலும் இந்த இடத்தை கடந்து செல்லும் போது மூக்கை பொத்திக்கொண்டு செல்ல வேண்டிய அவலநிலை ஏற்பட்டுள்ளது. வேலூர் நேதாஜி மார்க்கெட் பார்க்கிங் சென்டர், உள்ளது. அத்துடன் இந்த பகுதியில் தினமும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வந்து செல்லும் பகுதியாகும். மெயின் பஜார் மற்றும் வேம்புலியம்மன் கோயில் தெரு விழியாக வெளியே வரும் பிரதான வழியாகவும் இது உள்ளது.

இப்படி மாநகரத்தின் மத்தியில் கொட்டி கிடக்கும் குப்பையும் மலைபோல் உள்ளது. இதனால் குப்பைகளை அள்ளுவதில் மாநகராட்சி துப்புரவு பணியாளர்கள் மெத்தனம் காட்டி வருகின்றனர். இங்கு பழ மார்க்கெட்டில் கெட்டுப்போகும் பழங்களையும் இங்குதான் கொட்டி விட்டுச் சென்றுவிடுகின்றனர். அது மட்டுமன்றி இந்தப்பகுதி சிறுநீர் கழிக்கும் பகுதியாகவும் ஒதுக்கப்பட்ட பகுதியாகவே மாறியுள்ளது. இதனால் துர்நாற்றம் மூக்கை துளைத்து விடுகிறது. மக்களை மிகவும் முகம் சுளிக்க வைத்துள்ளது. இதுகுறித்து பலமு¬ புகார் தெரிவித்தும் மாநகராட்சி நிர்வாகம் கண்டும் காணாமல் அமைதி காத்து வருகின்றனர். இந்த பகுதியில் இருக்கும் வியாபாரிகள் எத்தனையோ முறை மனுக்களும் கொடுத்து பார்த்துவிட்டனர். ஆனால் ஏமாற்றம்தான் மிச்சம் என புலம்புகிறார்கள் அப்பகுதி வியாபாரிகள்.

Label