OUR CLIENTS
கும்கி நடிகையைக் கலாய்க்கும் நெட்டிசன்கள்!
கும்கி நடிகையைக் கலாய்க்கும் நெட்டிசன்கள்! Posted on 25-May-2017 கும்கி நடிகையைக் கலாய்க்கும் நெட்டிசன்கள்!

உடல் எடையைக் குறைத்தாலும், கும்கி நடிகையைக் கலாய்த்து வருகின்றனர் நெட்டிசன்கள்.

ஸ்கூல் படிக்கும்போதே ஹீரோயினாக அறிமுகமானவர், கேரளாவைச் சேர்ந்த கும்கி நடிகை. ஆனால், சில வருடங்களிலேயே ஸ்கூல் பேக் போல குப்பென உப்பிப் போனார். அவரைப் பார்ப்பவர்களுக்கு, ஆன்ட்டி போலவே தோற்றமளித்தார் நடிகை. இதனால், பட வாய்ப்புகள் இல்லாமல் போனது.

எப்படியோ கஷ்டப்பட்டு உடம்பைக் குறைத்த நடிகை, நடன இயக்குநருக்கு ஜோடியாக ஒரு படத்தில் நடித்து வருகிறார். இதில், பரதநாட்டியக் கலைஞராக நடிக்கிறார் அவர். இதன் புகைப்படங்கள் சமீபத்தில் ரிலீஸானது. அந்த புகைப்படத்தை, சந்தானம், பவர் ஸ்டார், மிர்ச்சி சிவா போன்றவர்கள் ஆடிய காமெடி பரதநாட்டியத்தோடு இணைத்து மீம்ஸ் கிரியேட் செய்து வெளியிட்டுள்ளனர் நெட்டிசன்கள். இதனால், வருத்தத்தில் இருக்கிறார் கும்கி நடிகை. உண்மை என்னவென்றால், 7 வருடங்களாக முறைப்படி பரதநாட்டியம் கற்றுவருகிறாராம் அவர்.

Label