OUR CLIENTS
உப்பிய உடம்பு... ஊருக்குத் திரும்பிய நடிகை!
உப்பிய உடம்பு... ஊருக்குத் திரும்பிய நடிகை! Posted on 25-May-2017 உப்பிய உடம்பு... ஊருக்குத் திரும்பிய நடிகை!

அதிகரித்த உடல் எடை காரணமாக வாய்ப்புகள் இல்லாததால், சொந்த ஊருக்கே திரும்பிவிட்டார் நடிகை என்கிறார்கள்.

பாவாடை - தாவணி கட்டி, கன்னக்குழியுடன் அறிமுகமான மும்பை நடிகை இவர். இளையராஜாவின் பாடலுக்கு ஆடிய அவர் அழகைப் பார்த்து, கோடம்பாக்கமே கும்மாளமானது.

இத்தனைக்கும் இந்த நடிகை ஏற்கெனவே ஒன்றிரண்டு தமிழ்ப் படங்களில் பயங்கர கவர்ச்சியாக நடித்தவர். ஆனால், அந்த படங்கள் ரிலீஸான சுவடே தெரியாததால், தற்போதுதான் அறிமுகமானது போல் காட்டிக் கொண்டார் நடிகை.

பெரும்பாலும் இரண்டு ஹீரோயின்களில் ஒருவராக நடித்தவர், சில படங்களில் கெஸ்ட் ரோல் போல வந்துபோனார். இதனால் நிறைய படங்களில் கமிட்டானாலும், படங்களின் எண்ணிக்கை போலவே எடையும் அதிகரித்தது. இதனால், துணி சுற்றிய டிரம் போலக் காட்சியளிக்கிறார் நடிகை. இந்த எடையோடு கவர்ச்சியும் காட்ட முடியாது என்பதால், எடையைக் குறைப்பதற்காக சிறிது இடைவெளி எடுத்துக்கொண்டு சொந்த ஊருக்குப் போகிறாராம். அந்த நேரத்தில், சொந்த மொழியான மராட்டியப் படங்களில் நடிக்கவும் திட்டமாம்.

Label