OUR CLIENTS
ரஞ்சி போட்டியை பொதுவான இடத்தில் நடத்த கேப்டன்கள் எதிர்ப்பு!
ரஞ்சி போட்டியை பொதுவான இடத்தில் நடத்த கேப்டன்கள் எதிர்ப்பு! Posted on 25-May-2017 ரஞ்சி போட்டியை பொதுவான இடத்தில் நடத்த கேப்டன்கள் எதிர்ப்பு!

மும்பை, மே 25-
இந்தியாவின் பிரதான முதல்தர கிரிக்கெட் போட்டியான ரஞ்சி தொடர் கடந்த சீசனில் பரிசோதனை முயற்சியாக பொதுவான இடங்களில் நடத்தப்பட்டது. இதற்கு கேப்டன்கள் மற்றும் பயிற்சியாளர்களிடம் எத்தகைய வரவேற்பு இருக்கிறது என்பது குறித்து நேற்று கருத்து கேட்கப்பட்டது.

மும்பையில் இதற்கான ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் பங்கேற்ற பெரும்பாலான கேப்டன்கள் மற்றும் பயிற்சியாளர்கள் ரஞ்சி ஆட்டங்கள் பொதுவான இடங்களில் நடத்தப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். பொதுவான இடங்களில் நடத்தப்படும் போது போதுமான பயிற்சி ஆடுகளங்கள் ஏற்பாடு செய்து தரப்படுவதில்லை.

அதிகமாக பயணம் செய்ய வேண்டி இருப்பதால் சோர்வு ஏற்பட்டு விடுகிறது என்பது போன்ற குறைகளை சுட்டிக்காட்டினர். அதனால் பழைய முறைப்படி உள்ளூர்-வெளியூர் அடிப்படையில் ரஞ்சி போட்டியை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தினர். இது குறித்து கிரிக்கெட் வாரியம் விரைவில் முடிவு செய்ய உள்ளது.

Label