OUR CLIENTS
பாமர மக்களை மிரட்டி பணம் சுருட்டும் பஞ்.,செயலர்!
பாமர மக்களை மிரட்டி பணம் சுருட்டும் பஞ்.,செயலர்! Posted on 27-May-2017 பாமர மக்களை மிரட்டி பணம் சுருட்டும் பஞ்.,செயலர்!

கிருஷ்ணகிரி, மே 27-
கிருஷ்ணகிரி மாவட்டம்,  நாரலப்பள்ளி பஞ்சாயத்து மகாராஜாகடையை சேர்ந்தவர் சிவமணி. இவர் பஞ்சாயத்து செயலராக பணிபுரிந்து வருகிறார். ஆனால் எப்படி பணம் சுருட்டுவது என்பதை மட்டும் கற்று வைத்துள்ளார் இந்த பலே கில்லாடி.

இவர் பாமர மக்களை வாட்டி வதைப்பதோடு மட்டுமன்றி உங்களுக்கு வேலை தரமாட்டேன் என்று மிரட்டி உருட்டி 5 முதல் 10 நாட்கள் வேலை வாங்கி கொண்டு 30 நாட்கள் வேலை செய்ததாக கையொப்பம் வாங்கி மெகா மோசடி செய்து சொத்துக்களை வாரி குவித்துள்ளார் இந்த சிவமணி. இப்படி மக்களை ஏமாற்றி சம்பாதித்த பணத்தில்தான் ரூ.50 லட்சம் மதிப்பில் பங்களா, கார் என சொகுசாக வாழ்ந்து வருகிறார் என பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். இவர் எந்த அதிகாரியையும் மதிப்பதில்லை. அதிகாரிகளை பணம் கொடுத்து சரிகட்டி விடுகிறார். குறிப்பாகச் சொல்ல வேண்டும் என்றால் பஞ்சாயத்து நிதியை போலி கையெழுத்து போட்டு எடுத்து கொண்டதாகவும் பகீர் தகவல்கள் வெளியாகி வருகின்றன. 

இவரது நடவடிக்கையை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கண்காணிப்பது இல்லை. குறிப்பாகச் சொல்ல வேண்டும் என்றால் இவரது நடவடிக்கை கொஞ்சம் ஓவராக உள்ளது. பொதுமக்களை கிள்ளுகீரைகளாக நடத்துகிறார். யாருக்கும் நான் பயப்பட மாட்டேன் என்று மார்தட்டுகிறார். இவரது வீட்டில் லஞ்ச ஒழிப்பு துறையினர் அதிரடி சோதனை நடத்தினால் உண்மை உலகுக்கு வெட்டவெளிச்சமாகும். ஊரை கொள்ளையடித்த பணத்தை அரசு கையகப்படுத்த வேண்டும். ஏழைகள் ரத்தத்தை உறிஞ்சி சுரண்டிய பணத்தை அரசு மீட்க வேண்டும். பஞ்சாயத்து கணக்கை தவறாக பதிவு செய்து விட்டு பணத்தை ஸ்வாகா விட்டுள்ளார் இந்த சிவமணி. நூறு நாள் வேலை திட்டம் என்பது சிவமணி ராஜ்யம் கொடி கட்டி பறக்கிறதுக்கு ஒரு நல்ல உதாரணம் எனலாம். 

மாவட்ட நிர்வாகத்துக்கு பலமுறை புகார் மனுக்கள் கொடுத்தும் நடவடிக்கை எடுக்காமல் மௌனம் காத்து வருவதாகவும் கூறப்படுகிறது. சாதாரண பஞ்சாயத்து செயலாளரான சிவமணியே இத்தனை தில்லுமுல்லுகளை தைரியமாக செய்து வருகிறார். ஆனால் யாருக்கும் பயப்படாமல் பணம் ஒன்றை மட்டுமே குறியாக கொண்டு செயல்பட்டு வருகிறார் இந்த பந்தா பேர்வழி சிவமணி. இவர் மீது புகார் சொல்ல விடாமல் பயமுறுத்தி தடுத்து வைத்துள்ளார் பாமர மக்களை என்று சொன்னால் அது மிகையாகாது.  குறிப்பாக ஊரில் நிலவும் தண்ணீர் பஞ்சத்தை தீர்க்க நிதி ஒதுக்கியும் அந்த நிதியை தனக்காக ஒதுக்கி எடுத்து கொண்டாராம் தில்லாலங்கடி சிவமணி. இப்படி பஞ்சாயத்து நிதியை ஸ்வாகா விட்டுள்ளார் சிவமணி. எங்கும் தண்ணீர் பிரச்னை தலைவிரித்து ஆடுகிறது. 

ஆனால் பல லட்சங்களை சிறிது சிறதாக சுருட்டியுள்ளார் பலே கில்லாடி சிவமணி. அரசு பணத்தை ஆட்டையை போடுவதில் வல்லவர், நல்லவர் இந்த சிவமணி. இவருடைய பெயர் எங்கும் நிறைந்துள்ளது. ஊழலில் திளைத்துள்ள சிவமணி மீது துறை ரீதியான நடவடிக்கை எடுகக வேண்டும் என்பதுதான் சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்களின் ஒட்டுமொத்த எதிர்பார்ப்பாகும்.
 
இவருக்கு பின்புலமாக செயல்படுவது யார் என்று மாவட்ட நிர்வாகம் கண்டுபிடித்து அந்த நபர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். சிவமணியை என்று கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்துகிறார்களோ அன்றுதான் நாரலப்பள்ளி பஞ்சாயத்துக்கு விடிவுகாலம் பிறக்கும். அதுவரை இந்த ஊழலில் திளைத்தவரை வைத்து கொண்டிருந்தால் ஊழல் மலிந்துபோகுமே தவிர ஆக்கப்பூர்வமான பணிகள் எதுவும் நடக்காது என்பது மட்டும் உறுதி. மாவட்ட நிர்வாகம் இவர் மீது என்னென்ன நடவடிக்கைகளை எடுக்கிறது என்பதையும், நூறு நாள் வேலை திட்டத்தில் பணியாற்றும் பணியாளர்களும் காப்பாற்றப்படுவார்களா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். 

Label