OUR CLIENTS
அடிப்படை பணிகளை நிறைவேற்றி தொடர் வெற்றி பெறும் கவுன்சிலர்!
அடிப்படை பணிகளை நிறைவேற்றி தொடர் வெற்றி பெறும் கவுன்சிலர்! Posted on 27-May-2017 அடிப்படை பணிகளை நிறைவேற்றி  தொடர் வெற்றி பெறும் கவுன்சிலர்!

கிருஷ்ணகிரி, மே 27-
கிருஷ்ணகிரி மாவட்டம், மாதேப்பள்ளி ஊராட்சியைச் சேர்ந்தவர் சி.சேகர்.  இவர் முன்னாள் கவுன்சிலர் ஆவார். இவர் மீது மக்கள் அசைக்க முடியாத நம்பிக்கை வைத்துள்ளனர். இதன் விளைவுதான் இவர் தொடர்ந்து 2 முறையாக கவுன்சிலராக தேர்வு செய்யப்பட்டார். 

இந்நிலையில் மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை தேவையறிந்து செய்து வருகிறார். மக்களின் மீது நம்பிக்கையை வளர்த்து கொண்டு இருக்கும் கவுன்சிலர் சேகர் மட்டும்தான் என்று சொல்லலா. இவர் கடந்த 2001-2010 வரை கவுன்சிலராக தொடர்ந்து இருந்து வருகிறார். இந்நிலையில் மக்கள் பணியை மகேசன் தொண்டாக உற்சாகத்துடன் செய்து வந்தார். 

இந்நிலையில் வரவுள்ள உள்ளாட்சி தேர்தலிலும் மீண்டும் மூன்றாவது முறையாக களம் இறங்க தயாராகி வருகிறார் சேகர். மக்கள் செல்வாக்கு மிக்க சேகருக்கு மக்கள் ஆதரவு கரம் நீட்டி வருகின்றனர். ஓட்டு போட்ட மக்கள் கூப்பிட்டால் போதும் ஓடோடி வந்து பணி செய்து தருகிறார் கவுன்சிலர் சேகர். கடமையை மறக்காமல் செய்கிறார். 

இந்தப்பகுதி மக்களும் இவரையே விரும்புகின்றனர். திமுகவைச் சேர்ந்தவராக இருந்தாலும் கட்சி பாகுபாடின்றி செயல்படுகிறார். தனது கட்சி ஆட்சியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் அவரது பணி எந்த தொய்வும் இல்லாமல் மிகவும் சிறப்பாக பணியாற்றி வருகிறார். 

இதனால் மக்கள் இவரையே நிரந்தர கவுன்சிலராக மானசீகமாக தேர்வு செய்து விட்டனர் என்று சொன்னால் அது மிகையாகாது. இவரை வெல்ல இந்த பகுதியில் யாரும் இல்லை என்றே சொல்லலாம். இதற்கு முன்னோட்டம்தான் இது. இதற்கு விடைதான் நடைபெறவுள்ள உள்ளாட்சி தேர்தல். அதுவரை பொறுத்திருப்போம். 

Label