OUR CLIENTS
தாவர நோய்த் தடுப்புத் துறை அதிகாரிகள் கூண்டோடு மாற்றம் : லஞ்சப் புகார் எதிரொலி?
தாவர நோய்த் தடுப்புத் துறை அதிகாரிகள் கூண்டோடு மாற்றம் : லஞ்சப் புகார் எதிரொலி? Posted on 27-May-2017 தாவர நோய்த் தடுப்புத் துறை அதிகாரிகள் கூண்டோடு மாற்றம் : லஞ்சப் புகார் எதிரொலி?

சென்னை, மே 27-
மத்திய தாவர நோய்த் தடுப்புத் துறையின் சென்னை மண்டல அலுவலகத்தில் பணியாற்றிய 25 அதிகாரிகள் வியாழக்கிழமை கூண்டோடு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

இந்தியாவிலிருந்து ஏற்றுமதி, இறக்குமதி செய்யப்படும் வேளாண் பொருள்களை ஆய்வு செய்து சான்றிதழ் வழங்குவதற்காக மத்திய வேளாண் அமைச்சகத்தின் கீழ் தாவர நோய்த்தடுப்பு மற்றும் பாதுகாப்புத் துறை செயல்பட்டு வருகிறது. இதன் மண்டல அலுவலகம் சென்னை மீனம்பாக்கத்தில் செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலகத்தின் கட்டுப்பாட்டில் தமிழ்நாடு, கர்நாடகம், ஆந்திரம், தெலங்கானா, கேரளம் ஆகிய மாநிலங்கள் மற்றும் புதுச்சேரி, அந்தமான் நிகோபர் ஆகிய யூனியன் பிரதேசங்கள் அடங்கியுள்ளன.

சிபிஐ சோதனை மற்றும் கைது நடவடிக்கை: இந்த நிலையில், லஞ்சம், முறைகேடு புகாரை அடுத்து கடந்த ஏப்ரல் 24-ம் தேதி மத்திய புலனாய்வுத் துறை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர். இதனையடுத்து இத்துறையின் இணை இயக்குநர்களாக பணியாற்றி வந்த டாக்டர் பி.மாணிக்கம், டாக்டர் சத்தியநாராயணா, ஆய்வக அலுவலர் மஹராஜன், தூத்துக்குடி அலுவலக அதிகாரி ராம் பர்தாப், தனியார் நிறுவனத்தைச் சேர்ந்த ராஜகுமார் உள்ளிட்டோரை சிபிஐ கைது செய்து சிறையில் அடைத்தனர். இதே அலுவலகத்தில் இதுபோன்ற மிகப் பெரிய அளவிலான கைது நடவடிக்கை 2012-ம் ஆண்டும் நடைபெற்றது. மேலும் இந்த அலுவலகத்தின் மூலம் நடைபெற்றுவரும் முறைகேடுகள் குறித்து சிபிஐயின் சிறப்புப் படையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கூண்டோடு இடமாற்றம்: இதனிடையே சென்னை மண்டலத்தில் பணியாற்றி வந்த அதிகாரிகள் 25 பேர் வியாழக்கிழமை கூண்டோடு இடமாற்றம் செய்யப்பட்டனர். இதில் சென்னையைச் சேர்ந்த அலுவலகத்தின் 17 பேர் தில்லி அருகே உள்ள ஃபரீதாபாத் தலைமை அலுவலகத்திற்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். ஆனால், சென்னை அலுவலகத்துக்கு நாட்டின் இதர பகுதிகளிலிருந்து 7 அதிகாரிகள் மட்டுமே நியமிக்கப்பட்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து உதவி இயக்குநர்களும் விரைவில் மாற்றம் செய்யப்படுவார்கள் என கூறப்படுகிறது.

ஏற்றுமதி, இறக்குமதி பொருள்களை விடுவிப்பதற்கான சான்றுகளைப் பெற நாள் ஒன்றுக்கு சுமார் 200-க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் வருகின்றன. இவற்றை ஆய்வு செய்து சான்று வழங்க சராசரியாக மூன்று நாள்களுக்கும் மேல் ஆகின்றன. ஏற்கனவே அலுவலர் பற்றாக்குறை இருந்து வந்த நிலையில் தற்போது பணியாற்றிய அதிகாரிகளும் கூண்டோடு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதால் இப்பணிகள் நிச்சயம் பாதிக்கப்படும் அபாயம் உள்ளதாக வர்த்தகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

Label