OUR CLIENTS
அரசு அகழ்வைப்பகம் வளாகத்துக்குள் தொழிலாளி தூக்கு மாட்டி தற்கொலை!
அரசு அகழ்வைப்பகம் வளாகத்துக்குள் தொழிலாளி தூக்கு மாட்டி தற்கொலை! Posted on 27-May-2017 அரசு அகழ்வைப்பகம் வளாகத்துக்குள் தொழிலாளி தூக்கு மாட்டி தற்கொலை!

தருமபுரி, மே 27-
அரசு தொல்லியல்துறை அகழ்வைப்பகத்தில் மூட்டை தூக்கும் தொழிலாளி ஒருவர்  தூக்கு மாட்டி தற்கொலை செய்துகொண்டதில் பல்வேறு சந்தேகங்கள் உள்ளதால் அது தற்கொலையா? கொலையா? என போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

தருமபுரி மாவட்டம், ஆத்துமேடு பகுதியைச் சேர்ந்த காவேரி மகன் முனுசாமி(47). மூட்டைதூக்கும் தொழிலாளி. இவரது மனைவி பழனியம்மாள், மற்றும் பூவரசு, சிலம்பரசன், தமிழரசு  ஆகிய 3 மகன்கள் உள்ளனர். கருத்துவேறுபாடு காரணமாக கடந்த 6 மாதத்துக்கும் மேலாக பழனியம்மாளும், 3 மகன்களும் அரகாசனஅள்ளியில் உள்ள தாயார் வீட்டில் தனியாக வசித்து வருகின்றனர்.

தருமபுரியில் உள்ள தமிழ்நாடு அரசு  தொல்லியல்துறை அகழ்வைப்பகம் அலுவலகம் அருகே அம்மா சிமென்ட்  குடோனில் முனுசாமி மூட்டை தூக்கும் வேலை செய்துவந்தார். இவரும் கடந்த 6 மாதத்துக்கு மேலாக வீட்டுக்குபோகாமல் இரவு நேரத்தில் அகழ்வைப்பகம் அலுவலக வளாகத்திற்குள் தங்கிவந்துள்ளார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் (25ம் தேதி) இரவு மனைவியை பார்பதற்காக அரகாசனஅள்ளி கிராமத்துக்கு சென்றுவந்ததாக கூறப்படுகிறது. பின்னர் முனுசாமி அதிகாலை அரசு அகழ்வைப்பகம் அலுவலக கட்டடம் பின்புறமுள்ள இரும்பு ஆங்கிளில் தூக்கு மாட்டி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து தகவலறிந்து வந்த தருமபுரி நகர போலீஸார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இவர் தூக்கு மாட்டி தற்கொலை செய்ததில் பல மர்மம் உள்ளதாக போலீஸார் தெரிவித்துள்ளனர். மேலும் இது கொலையா? தற்கொலையா? என தருமபுரி நகர போலீஸார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

தருமபுரி நான்குரோடு அருகே தமிழ்நாடு அரசு தொல்லியல்துறை அகழ்வைப்பக அலுவலகம் உள்ளது. வெள்ளிக்கிழமையை தவிர தினசரி வேலைநாட்களில்  காலை 10 மணி முதல் மாலை 5.30 மணி வரை திறக்கப்படுகிறது. இங்கு அலுவலர் திருமால், அலுவலக காப்பாளர் செல்வராஜ் பபணியாற்றி வருகின்றனர். கடந்த சில மாதங்களாக இந்த அலுவலகத்தில் இரவு நேரங்களில்  சிலர் தங்குவதாகவும், இறந்த முனுசாமியும் கடந்த 6 மாதமாக இங்கே தங்கிவந்ததாகவும் கூறப்படுகிறது. இதுதவிர அலுவலக வளாகத்திற்குள் அவ்வப்போது ஆடுவெட்டுவதும், சட்டவிரோதச் செயல்கள் நடப்பதாகவும் பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.தற்போது இந்த அலுவலக வளாகத்துகுள்ளேயே ஒருவர் தூக்கு மாட்டி தற்கொலை செய்துகொண்ட சம்பவத்தால் அகழ்வைப்பகம் சமூகவிரோதிகள் கூடாரமாக மாறும் சூழ்நிலை உருவாகும் என சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

Label