OUR CLIENTS
காவல் ஆய்வாளர்கள் 7 பேர் பணியிட மாற்றம்!
காவல் ஆய்வாளர்கள் 7 பேர் பணியிட மாற்றம்! Posted on 27-May-2017 காவல் ஆய்வாளர்கள்  7 பேர் பணியிட மாற்றம்!

வேலூர், மே 27-
வேலூர், திருவண்ணாமலை மாவட்டங்களில் காவல் ஆய்வாளர்கள் 7 பேர் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர்.

இதுகுறித்து வேலூர் சரக டி.ஐ.ஜி. ஆர்.தமிழ்சந்திரன் புதன்கிழமை பிறப்பித்த உத்தரவு: வேலூர் மாவட்டம், அரக்கோணம் போக்குவரத்துக் காவல் ஆய்வாளர் கோவிந்தசாமி திருவண்ணாமலைக்கும், அங்கு பணிபுரிந்து வந்த கனி, அரக்கோணத்துக்கும் மாற்றப்பட்டனர். வேலூர் போக்குவரத்துக் காவல் ஆய்வாளர் சீத்தாராமன் காட்பாடிக்கும், ஆயுதப்படை காவல் ஆய்வாளர் மணி வேலூர் போக்குவரத்துப் பிரிவுக்கும், ராணிப்பேட்டை காவல் ஆய்வாளர் ராஜசீலன் ஆயுதப்படை மோட்டார் வாகனப் பிரிவுக்கும், அங்கு பணியாற்றிய நாகராஜன் ராணிப்பேட்டை போக்குவரத்துக் காவல் ஆய்வாளராகவும் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர். 

காட்பாடி போக்குவரத்துக் காவல் ஆய்வாளர் சீனிவாசன் வேலூர் ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டார்.  இதுதவிர போக்குவரத்து உதவி ஆய்வாளர்கள் 17 பேர் பல்வேறு காவல் நிலையங்களில் போக்குவரத்துப் பிரிவுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

Label