OUR CLIENTS
அ.தி.மு.க. அரசின் 100 நாள் சாதனை மலர் முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியீடு
அ.தி.மு.க. அரசின் 100 நாள் சாதனை மலர் முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியீடு Posted on 27-May-2017 அ.தி.மு.க. அரசின் 100 நாள் சாதனை மலர் முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியீடு

சென்னை, மே 27-
தமிழக அரசின் 100 நாள் சாதனை மலர், குறும்படங்கள் மற்றும் பாடல்கள் அடங்கிய குறுந்தகடு, முதல்வரின் உரை தொகுப்பு ஆகியவற்றை முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிட அதை அமைச்சர்கள் பெற்றுக் கொண்டனர்.

முதல்வர்-எடப்பாடி பழனிசாமி கடந்த பிப்ரவரி மாதம் 16-ந் தேதி பதவி ஏற்றார்.  சட்டசபையில் 18-ந் தேதி அவர் பெரும்பான்மையை நிரூபித்தார். பிப்ரவரி 20-ந் தேதி பகல் 12 மணிக்கு முதல்-வருக்கான இருக்கையில் அமர்ந்து பணியை தொடங்கினார். அன்றைய தினம் 5 முக்கிய கோப்புகளில் எடப்பாடி பழனிசாமி கையெழுத்திட்டார்.

தமிழகத்தில் கூடுதலாக 500 மதுக்கடைகளை மூடுதல், ரூ. 200 கோடி செலவில் அம்மா இருசக்கர வாகன திட்டம், டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதி உதவி ரூ. 12 ஆயிரத்தில் இருந்து ரூ. 18 ஆயிரமாக உயர்த்துவது, மீனவர்களுக்கு தனி வீட்டுவசதி திட்டம் மூலம் ஒரு வீடு ரூ. 1 லட்சத்து 70 ஆயிரம் வீதம் 5 ஆயிரம் வீடுகள் கட்டுதல், வேலை வாய்ப்பற்ற இளைஞர்களுக்கு வழங்கப்படும் உதவித்தொகை இரு மடங்காக உயர்த்தப்பட்டு 54821 இளைஞர்கள் பயன்பெறும் கோப்புகளில் கையெழுத்திட்டார்.

இது தவிர ரூ. 6,400 கோடியில் 32 ஆயிரத்து 9 திட்டப்பணிகள் திறப்பு, ரூ. 450 கோடியே 14 லட்சத்தில் 52 பணிகளுக்கு அடிக்கல் நாட்டியது 1161 நபர்களுக்கு புதிய வேலைவாய்ப்பு, சென்னை மெட்ரோ ரெயில் பயணிகள் சேவை, திருமங்கலம் - நேரு பார்க் சுரங்கப் பாதை வழித்தடத்தில் துவக்கம், ரூ. 2,247 கோடியில் இடுபொருள் மானிய நிவாரணம் வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளின் வங்கிக்கணக்கில் நேரடியாக செலுத்தப்பட்டது முக்கியமானதாகும்.

மேலும் தென்னையில் இருந்து நீராபானம் உற்பத்தி செய்ய அனுமதித்தது ரூ.802.9 கோடியில் மானாவாரி விவசாயிகளுக்கு ‘நீடித்த மானாவரி விவசாயத்துக்கான இயக்கம்’ என்ற சிறப்பு திட்டம் அறிமுகம் செய்தது.

ரூ. 882 கோடியில் வேளாண் உற்பத்தியை அதிகரிக்க 1,58,261 விவசாயிகளுக்கு பயிர்கடன் அறிவிப்பு, தமிழ்நாட்டில் ஸ்மார்ட் ரே‌ஷன்கார்டு வழங்கி நடைமுறைக்கு கொண்டுவந்தது.

1000 மெகாவாட் திறன் கொண்ட கூடங்குளம் அணுமின் நிலையத்தின் 2-ம் அலகில் மின் உற்பத்தி துவக்கம், குடிநீர் பற்றாக்குறையை போக்க ரூ.100 கோடி அனுமதித்தது

திருக்குறள் கொரிய மொழியில் மொழிபெயர்ப்பு 10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் முதல் 3 இடங்களை அறிவிக்கும் நடைமுறை ரத்து, 10, 12 -ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் மாணவர்களின் செல்போனுக்கு எஸ்.எம்.எஸ் ஆக அறிவித்தது.
5லு லட்சம் மாணவ- மாணவிகளுக்கு விலையில்லா மடிக்கணினி வழங்கியது. 

சென்னை மாநகராட்சியில் ரூ .153 கோடியில் 60 கி.மீ. நீளத்துக்கு மழைநீர் வடிகால் பணிகள் செய்தல், ரூ.125.7 கோடியில் பாலங்கள் சீரமைத்தல்.

அங்கீகாரமற்ற மனைப்பிரிவுகள் மற்றும் மனைகள் வரன்முறைப்படுத்த விதிகள் வெளியீடு. பொதுமக்களுக்கு நியாயமான விலையில் போதுமான அளவில் மணல் கிடைக்க அரசே நேரடி விற்பனை செய்வது, ஏரி, கால்வாய் மற்றும் அணைகளில் உள்ள வண்டல் மண்ணை விவசாயிகள் மண்பானை செய்பவர்கள் எடுத்து செல்ல இலவச அனுமதி, 30 கோவில்களில் அன்னதான திட்டம் விரிவுபடுத்தியது.

புதிதாக 169 பஸ்கள் இயக்கம், தொழிலாளர்களுக்கு நிலுவைத்தொகை வழங்க ரூ. 1,250 கோடிக்கு அனுமதி அவினாசியில் புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் 187 உதவி பேராசிரியர்கள் நியமனம் என ஏராளமான முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டு அதை செயல்பாட்டுக்கும் கொண்டு வந்தார்.

100 நாளில் 1969 கோப்புகளில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கையெழுத்திட்டு நடைமுறைக்கு கொண்டு வந்து சாதனை படைத்துள்ளார்.

இதையொட்டி நேற்று தலைமை செயலகத்தில் நடைபெற்ற விழாவில் தமிழக அரசின் 100 நாள் சாதனை மலர், குறும்படங்கள் மற்றும் பாடல்கள் அடங்கிய குறுந்தகடு, முதல்-அமைச்சரின் உரை தொகுப்பு ஆகியவற்றை செய்தி மக்கள் தொடர்புதுறை சார்பில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிட அதை அமைச்சர்கள் கடம்பூர் ராஜூ, திண்டுக்கல் சீனிவாசன், செங்கோட்டையன் பெற்றுக் கொண்டனர்.

இதில் அமைச்சர் கருப்பண்ணன், தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், செய்தி துறை செயலாளர் வெங்கடேசன், கூடுதல் இயக்குனர்கள் எஸ்.பி. எழிலழகன், ரவீந்திரன் கலந்து கொண்டனர்.

Label