OUR CLIENTS
3 லட்ச வருடங்களுக்கு முன் மனித இனத்தில் நடந்த டுவிஸ்ட்!
3 லட்ச வருடங்களுக்கு முன் மனித இனத்தில் நடந்த டுவிஸ்ட்! Posted on 27-May-2017 3 லட்ச வருடங்களுக்கு முன்  மனித இனத்தில் நடந்த டுவிஸ்ட்!

சுமார் 3 லட்சம் வருடங்களுக்கு முன் மனிதர்கள் மற்றும் குரங்கு இனத்திற்கு இடைப்பட்ட காலத்தில் வாழ்ந்தவர்கள் தான் சிறுமூளை மனிதர்கள். இவர்கள் எப்படி அழிந்தார்கள் என்பது குறித்து ஜோகன்ஸ்பர்க் ஆய்வு ஒன்றில் கண்டறியப்பட்டுள்ளது.

சிறுமூளை மனிதர்களை பற்றி ஆராய்ச்சி கூறுவது என்ன? ஜோகன்னஸ்பர்க்கில் இருந்து 50 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் இரண்டு இடங்களில் மனித இனத்தின் படிமங்களை அகழ்வாராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். அதில், 3 லட்சம் வருடங்களுக்கு முன் அழிந்ததாக அறியப்பட்டு வந்த மனித இனம் போன்ற தோற்றம் கொண்டவர்களின் படிமங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சிறுமூளை மனித இனம் 2 லட்சம் வருடங்களுக்கு முன்பே அழிந்திருக்க கூடும் என்று ஆராய்ச்சியில் நம்பப்பட்டது. ஆனால் குறிப்பிட்ட இந்த மனித இனம் 2,36,000 - 3,35,000 ஆண்டுகளுக்கு இடைபட்ட காலத்தில் வாழ்ந்துள்ளதாக இந்த ஆராய்ச்சியின் மூலம் தெரியவந்தது.

இந்த சிறுமூளை மனித இனத்தில் இருந்து மாறுபட்டே தற்போதைய மனிதர்கள் பரிமாணம் அடைந்திருக்கலாம் என்றும் கருதுகின்றனர். இவர்கள் சிம்பான்சி, கொரில்லாக்களுடன் மிகவும் நெருக்கமாக வாழ்ந்து வந்ததும் தெரியவந்துள்ளது. மேலும் இவர்கள் வாழ்ந்து வந்த காலக்கட்டத்தில் தான் தற்போதைய மனிதர்களின் மூதாதையர்கள் வாழ்ந்து வந்திருக்க வேண்டும் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர். இந்நிலையில் சிறுமூளை மனித இனம் இறந்தோரை புதைக்கும் வழக்கம் கொண்டிருந்துள்ளனர் என்ற புதிய கண்டுபிடிப்பு ஆராய்ச்சியாளர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

சிறுமூளை மனிதர்களின் அழிவிற்கு மனிதர்கள் காரணமா? சிறுமூளை மனித இனம் அழிவிற்கு, தற்போதைய மனித இனம் காரணமாக இருந்திருக்குமா? என்ற கேள்விக்கு அறிவியலாளர்கள் ஆம் என்று பதில் அளித்துள்ளனர். ஆனால் இந்த ஆய்வில், சிறுமூளை மனித இனத்தின் மரபணு மட்டும் கிடைக்கவில்லை. அது கிடைத்தால், பல லட்சம் ஆண்டுகளுக்கு முன் இருந்த மனித நிலை மற்றும் வரலாற்றை அறிந்திருக்க முடியும் என்று ஆராய்ச்சியாளார்கள் தெரிவிக்கின்றனர்.

Label