OUR CLIENTS
இந்தியாவே உலகின் மக்கள்தொகை மிகுந்த நாடு சீனா தனது மக்கள் தொகையை மிகைப்படுத்திக் கூறிவருகிறது
இந்தியாவே உலகின் மக்கள்தொகை மிகுந்த நாடு சீனா தனது மக்கள் தொகையை மிகைப்படுத்திக் கூறிவருகிறது Posted on 27-May-2017 இந்தியாவே உலகின் மக்கள்தொகை மிகுந்த நாடு சீனா தனது மக்கள் தொகையை மிகைப்படுத்திக் கூறிவருகிறது

அமெரிக்கா, மே 27-
சீனா தனது உண்மையான மக்கள் தொகையை விட மிகைப்படுத்திக் கூறிவருவதாகவும் இந்தியாவே உலகில் மக்கள்தொகை மிகுந்த நாடு என்றும் அமெரிக்காவின் விஸ்கான்சின் பல்கலைக்கழக ஆராய்ச்சியில் தெரிவந்துள்ளது.

சீனாவில் உழைக்கும் இளைஞர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாக இருப்பதாகவும், வயதானவர்களே அதிகம் உள்ளதால், சீனா தனது மக்கள் தொகையைக் கடந்த 27 ஆண்டுகளாக உயர்த்திக் கூறி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2016 ஆம் ஆண்டு முடிவில் சீனாவின் உண்மையான மக்கள் தொகை 129 கோடி என்றும் சீனா சொல்வதைப் போல் 138 கோடி இல்லை என்றும் தெரிவிக்கப் பட்டுள்ளது.

இந்தியாவின் மக்கள் தொகை 133 கோடி என்பதால், இந்தியாவே உலகின் மக்கள்தொகை மிகுந்த நாடு என்பது தெரியவந்துள்ளது. இந்த ஆராய்ச்சி முடிவுகளை உண்மை என்று சீனாவில் உள்ள பீக்கிங்  பல்கலைக் கழக ஆராய்ச்சி யாளர்களும் ஒத்துக் கொண் டுள்ளனர்.

எனவே, சீனாவில் குடும்பக் கட்டுப்பாட்டு முறையை விலக்கிக்கொள்ள வேண்டும் என்று அவர்கள் குரல் எழுப்பி வருகின்றனர்.

Label